islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி சார்பில் மதுரையில் கல்விக் கண்காட்சி நாளை தொடக்கம்




தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி சார்பில் மதுரை காந்தி அருங்காட்சியக வளாகத்தில் சனிக்கிழமை (ஏப்.23), மற்றும் ஞாயிற்றுக்கிழமை (ஏப். 24) ஆகிய இரு நாள்கள் மாபெரும் கல்விக் கண்காட்சி நடைபெறுகிறது.

இக்கண்காட்சியில் முன்னணியில் உள்ள 40-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் தங்களது அரங்குகளை அமைக்கின்றன. அவற்றில் உடனடி மாணவர் சேர்க்கை குறித்த விவரங்கள், உடனடி வேலைவாய்ப்பைத் தரும் பாடப்பிரிவுகள் குறித்த விவரங்கள், விரும்பும் கல்வி நிறுவனங்களுடன் நேர்முக உரையாடலுக்கான வாய்ப்புகளும் வழங்கப்படும். கல்விக் கண்காட்சியை மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் திறந்துவைக்கிறார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்ராகர்க் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொள்கிறார்.

கண்காட்சியில் அரங்குகள் அமைத்துள்ள கல்வி நிறுவனங்கள் விவரம்:

சேது தொழில்நுட்பக் கல்லூரி, வடமலையான் பாராமெடிக்கல் அறிவியல் கல்லூரி, கொடைக்கானல் கிறிஸ்தவக் கல்லூரி, ஓரியண்டல் இன்ஸ்ட்டியூட் ஆப் கேட்டரிங் டெக்னாலஜி, செட்டிநாடு காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, விக்ரம் பொறியியல் கல்லூரி.

மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சுப்பிரமணியா காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, வித்யா விகாஸ் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, செயிண்ட் மைக்கேல் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் மற்றும் டெக்னாலஜி.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், பி.வி.பி. கல்லூரி, மவுண்ட் சியோன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, பி.எஸ்.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி, மதுரை அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், அல்ட்ரா என்ஜினீயரிங் காலேஜ் ஃபார் உமன்.

ஸ்ரீராஜராஜன் காலேஜ் ஆப் என்ஜினீயரிங், டோக் பெருமாட்டி கல்லூரி, சண்முகானந்தம் என்ஜினீயரிங் கல்லூரி, பாண்டியன் சரஸ்வதி யாதவ் என்ஜினீயரிங் கல்லூரி, நாடார் சரஸ்வதி காலேஜ் ஆப் என்ஜினீயரிங் டெக்னாலஜி, விஜய் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட், குயீன் மீரா இண்டர்நேஷனல் ஸ்கூல், பாரத் நிகேதன் என்ஜினீயரிங் கல்லூரி, கேரியர் லாஞ்சர், ஓம் கன்ஸல்டிங், பென்டகன் கம்ப்யூட்டர், தக்ஷின், கேட் உள்ளிட்ட கல்வி தொடர்பான பயிற்சி நிறுவனங்களும் இதில் பங்கேற்கின்றன.

காந்தி அருங்காட்சியகத்தில் வரும் 23 (சனி), 24 (ஞாயிறு) ஆகிய தினங்களில் காலை 10.30 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சி நடைபெறும். கண்காட்சியைக் காண அனுமதி இலவசம்.

இதற்கான ஏற்பாடுகளை தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணியுடன் இணைந்து சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியும் செய்துள்ளது. ரேடியோ பார்ட்னராக ரேடியோ மிர்ச்சி செயல்படும்.

No comments:

Post a Comment