டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அதிக அளவில் விபத்து நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவருடன் செல்பவர்களும் இதனால் விபத்தில் சிக்கிக் கொள்கிறார்கள்.
இதை தடுக்க டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் பிடிபட்டால் முதல் தடவையாக 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். 2-வது தடவையாக பிடிபட்டால் 2 வருடம் சிறை தண்டனையும் ரூ. 3ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் பொலிசார் இதை கடுமையாக அமல்படுத்தாமல் அபராதம் மட்டுமே வசூலித்து விட்டு விடுவார்கள்.
இந்த ஆண்டு முதல் பொலிசாரின் பிடி இறுகி உள்ளது. குடிபோதையில் வாகன ஓட்டிகள் பிடிபட்டால் அவர்கள் மீது வழக்கு தொடர்ந்து சிறை தண்டனை வாங்கி கொடுக்கிறார்கள்.
கடந்த 3 1/2 மாதத்தில் டெல்லியில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக பிடிபட்ட 1000 பேருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதில் 44 பேர் 10 நாள் சிறை தண்டனை பெற்றுள்ளனர்.
வடக்கு டெல்லியில் 411 பேருக்கும், தெற்கு டெல்லியில் 287 பேருக்கும், மத்திய டெல்லியில் 186 பேருக்கும், கிழக்கு மற்றும் மேற்கு டெல்லியில் 117 பேருக்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
newindianews
No comments:
Post a Comment