islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மதுபான விற்பனை 18,062 கோடி ரூபாய் - கடந்த ஆண்டைவிட 2,229 கோடி அதிகம்



தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட 2,229 கோடி ரூபாய் மதுவிற்பனை அதிகரித்துள்ளது. இந்த ஆஅண்டில் மட்டும் 18,062 கோடி ரூபாய் வருமானம் அதிகரித்துள்ளது.


தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 6 ஆயிரத்து 696 மதுக்கடைகளை அரசின் டாஸ்மாக் நிறுவனமே நடத்திவருகிறது. இந்த கடைகளில் விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கடந்த 2009 - 2010-ம் ஆண்டு தமிழ்நாட்டில் 6 ஆயிரத்து 726 மதுக்கடைகள் இருந்தன. இந்த ஆண்டில், ரூ.13 ஆயிரத்து 853 கோடிக்கு மது விற்கப்பட்டது. 4 கோடியே 8 லட்சத்து 54 ஆயிரம் பெட்டிகள் விற்கப்பட்டன. ஒரு பெட்டி என்பது 48 குவார்ட்டர் பாட்டில்கள் அல்லது 24 அரை (ஆப்) பாட்டில்கள் அல்லது 12 முழு(புல்) பாட்டில்கள் ஆகும்.

2010 - 11-ம் ஆண்டில் ரூ.16 ஆயிரத்து 82 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. 4 கோடியே 78 லட்சத்து 91 ஆயிரம் பட்டில் மதுபானங்கள் விற்கப்பட்டன. இதில், பீர் பாட்டில்கள் மட்டும் 2 கோடியே 70 லட்சத்து 51 ஆயிரம் விற்பனையாயின.

கடந்த 2009 - 2010-ம் ஆண்டைவிட 2010 - 11 ம் ஆண்டு மது விற்பனை ரூ.2 ஆயிரத்து 229 கோடிக்கு அதிகரித்துள்ளது. அது போல குடிப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

2009 2010-ம் ஆண்டு தினமும் சராசரியாக 63 லட்சம்பேர் குடித்தனர். ஆனால் 2010 - 2011-ம் ஆண்டில் சராசரியாக 75 லட்சம்பேர் குடித்துள்ளனர்.

நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சத்து 30 ஆயிரமும், 75 ஆயிரம் பீர் பாட்டில்கள் மதுபானம் விற்கப்படுகிறது. தமிழக குடிகாரர்கள் பிராந்தி வகைகளைத்தான் அதிகம் விரும்பி குடிக்கிறார்கள். ரம் 2-வது இடத்தையும், விஸ்கி 3-வது இடத்திலும் உள்ளது.

No comments:

Post a Comment