islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்த ஆண்டு பி.இ. படிப்பில் 2.1 லட்சம் இடங்கள்: மன்னர் ஜவஹர்



பொறியியல் படிப்புகளில் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் அரசு ஒதுக்கீட்டு இடங்களின் எண்ணிக்கை நடப்பு ஆண்டில் 2.1 லட்சமாக உயர வாய்ப்பு உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னர் ஜவஹர் கூறினார்.

இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டி:

கடந்த 2010-11 கல்வியாண்டில் 1.9 லட்சம் அரசு ஒதுக்கீட்டின் கீழான பி.இ. இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டன.

ஆனால், இப்போது புதுக் கல்லூரி தொடங்குவதற்காக மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ஏ.ஐ.சி.டி.இ.-க்கு தமிழகத்திலிருந்து 83 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன. இதில் 40 பேர் பொறியியல் கல்லூரிகள் தொடங்க விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், தமிழகத்தில் உள்ள 486 பொறியியல் கல்லூரிகளில் பெரும்பாலான கல்லூரிகள், பி.இ. படிப்புகளில் மாணவரின் எண்ணிக்கையை உயர்த்த கோரி விண்ணப்பித்துள்ளன. எனவே, வரும் 2011-12 கல்வியாண்டில் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டுவதற்கு வாய்ப்புள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பி.இ. இடங்கள் 30 ஆயிரமாக உயர்ந்து வருகிறது. எனவே, வரும் கல்வியாண்டில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படும் பி.இ. இடங்களின் எண்ணிக்கை 2.1 லட்சமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார் மன்னர் ஜவஹர்.

No comments:

Post a Comment