islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அன்னா ஹஸாரே நடத்திய ஊழல் விபரங்கள் வெளியானது


லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவின் முதல் கூட்டம் நடந்து முடிந்துள்ள நிலையில் அன்னா ஹஸாரேவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளும் வெளியாகியுள்ளன.

அன்னா ஹஸாரேவின் தலைமையிலான ஹிந்து ஸ்வராஜ் அறக்கட்டளையுடன் தொடர்பாக நடந்த பொருளாதார முறைகளின் ஆறு வருடம் பழமையான நீதி விசாரணை அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளது.

லோக்பால் மசோதா வரைவு கூட்டுக் குழுவின் துணை தலைவர் சாந்திபூஷன் மற்றும் குழு உறுப்பினரான பிரசாந்த் பூஷன் ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக சி.டி வெளியானதைத் தொடர்ந்து ஹஸாரேவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் நீதி விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.

சாந்தி பூஷனுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுத் தொடர்பான சி.டியில் ஏராளமான சந்தேகங்கள் நிலவுகின்றன. ஆனால், ஹஸாரே மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தெளிவாக உள்ளன.

அறக்கட்டளையின் 2.2லட்சம் ரூபாய் ஹஸாரே தனது பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சட்டவிரோதமாக செலவழித்துள்ளதாக 2005-ஆம் ஆண்டு நீதிபதி பி.பி.சாவந்த் மஹாராஷ்ட்ரா அரசுக்கு சமர்ப்பித்த விசாரணை அறிக்கை கூறுகிறது.

மதசார்பற்ற கல்வியை ஊக்கப்படுத்துவதற்காக அளித்த அனுமதிக்கப்பட்ட 46,374 ரூபாய் ஹஸாரே ஒரு கோயிலின் சீரமைப்பு பணிகளுக்காக அளித்துள்ளதாகவும் விசாரணை அறிக்கை கூறுகிறது.

அறக்கட்டளைக்காக வழங்கப்பட்ட 11 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளை கமிஷனரின் அனுமதியில்லாமல் மாவட்ட பரிஷத்திற்கு பிரித்து வழங்கியுள்ளார்.

ஹஸாரேவின் பாரஷ்தாச்சர் விரோதி ஜனாஅந்தோலான் அறக்கட்டளையின் கணக்குகளை சட்டப்படி பேணுவதில்லை என சாவந்தின் அறிக்கை கூறுகிறது.

மஹாராஷ்ட்ரா அமைச்சராக பதவி வகித்த சுரேஷ் ஜெயின் ஹஸாரேவுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நீதி விசாரணை நடத்தப்பட்டது.

இத்துடன் அலகாபாத்தில் 1.33 கோடிரூபாய் மதிப்புடைய சொத்து வாங்கியதில் முத்திரைக் கட்டணத்தில் மோசடி நடத்தியது தொடர்பான உத்தரபிரதேச முத்திரை மற்றும் பதிவுத் துறை சாந்திபூஷனுக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரமும் வெளியாகியுள்ளது.
thoothu

21 0share0share21

No comments:

Post a Comment