islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மத்திய அரசில் குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு


மத்திய அரசில் காலியாக உள்ள குரூப் "பி' பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மத்திய பொதுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு ஏப்ரல் 2-8, 9-15 தேதியிட்ட "எம்ப்ளாய்மென்ட் நியூஸ்' இதழில் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு அலுவலகங்களில் 9 வெவ்வேறு குரூப் "பி' பணிகளுக்கு 92 இடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணிகளுக்கு மே 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை. கல்வித் தகுதி பி.இ., எம்.எஸ்சி, பி.எஸ்சி.அகில இந்திய வானொலியின் டிரான்ஸ்மிசன் எக்சிகியூட்டிவ் பணிகளுக்கு (குரூப் "சி') 26 இடங்கள் காலியாக உள்ளன. ஆந்திர மாநிலத்தில் எஸ்.சி பிரிவினருக்கு 8 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 4 இடங்களும், தமிழகத்தில் எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும் காலியாக உள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு மட்டுமே.

இதற்கான விண்ணப்பங்களை மே 11-ம் தேதி வரை அனுப்பலாம். வயது வரம்பு 18 முதல் 30 வரை. கல்வித் தகுதி பட்டப்படிப்பு, பி.எஸ்சி (வேளாண்மை). மேலும் விவரங்களுக்கு:www.sscsr.gov.in

No comments:

Post a Comment