வாக்காளர்களுக்கு கொடுக்க எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறி தேர்தல் ஆணையம் இதுவரை பறிமுதல் செய்துள்ள பணம் மற்றும் பொருளின் மதிப்பு ரூ 25 கோடியைத் தாண்டியது.
திருச்சியில் மட்டும் அதிகபட்சமாக ரூ 5.47 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தேர்தலில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்படும் பணம் தேர்தல் அதிகாரிகளின் உத்தரவுப்படி பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
திருச்சி தவிர, மதுரை மாவட்டத்தில் ரூ.3 கோடியே 91 லட்சமும், சென்னை மாவட்டத்தில் ரூ.43 லட்சத்து 77 ஆயிரமும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.2 கோடியே 69 லட்சமும், தர்மபுரி மாவட்டத்தில் ரூ. 1 கோடியே 39 லட்சமும், ஈரோடு மாவட்டத்தில் ரூ.1 கோடியே 78 லட்சமும், நீலகிரி மாவட்டத்தில் ரூ.1 கோடியே 72 லட்சமும் பிடிபட்டுள்ளது.
பணம் அல்லாமல், வாக்காளர்களுக்கு வழங்கப்பட கொண்டு செல்லப்பட்ட பொருள் என்ற சந்தேகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பிலும், சேலம் மாவட்டத்தில் ரூ.2 கோடியே 90 லட்சம் மதிப்பிலும் சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1 கோடியே 86 லட்சம் மதிப்பிலும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த தகவலை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment