islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

harley davidson 48-ஹார்லி டேவிட்சனின் புதிய பைக் தில்லியில் அறிமுகம்



அமெரிக்காவின் பிரபலமான ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் புதிய ரக பைக் தில்லியில் செவ்வாய்க்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. "ஃபார்டி எய்ட்' (48) என்ற பெயரில் இந்த மோட்டார் சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 8.5 லட்சமாகும். இந்தியாவில் உள்ள அனைத்து ஹார்லி டேவிட்சன் விற்பனையகங்களில் இந்த மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யப்படும் என்று நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புல்டாக்' எனப்படும் நாயின் தோற்றத்தைப் போல இந்த மோட்டார் சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1,200 சிசி திறன் கொண்ட இரட்டை என்ஜின், ஒருவர் மட்டுமே பயணிக்கும் வகையிலானஇருக்கை உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்களாகும். இந்நிறுவனம் 14 மாடல் மோட்டார் சைக்கிள்களை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment