islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

திருச்சி பஸ்ஸில் ரூ. 5.11 கோடி சிக்கியது


திருச்சியில் "ஆம்னி' பஸ்ஸில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 5.11 கோடியை தேர்தல் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.


தொலைபேசியில் ரகசியத் தகவல்: திருச்சி பொன்னகரில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான "ஆம்னி' பஸ்ஸில் பல கோடி ரூபாய் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருவாய்க் கோட்டாட்சியரும், திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான எஸ். சங்கீதாவுக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் தொலைபேசி மூலம் ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்டாட்சியர் சங்கீதா தனது கார் ஓட்டுநர் துரைராஜ், வீட்டுக் காவலாளி ராமர் ஆகியோருடன் பொன்னகருக்குச் சென்று, குறிப்பிட்ட எண் கொண்ட தனியார் பஸ் சாலையோரத்தில் நிற்பதை உறுதி செய்தார்.

மேலும், கருமண்டபம் சோதனைச் சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகேசுவரன், துணை ராணுவத்தைச் சேர்ந்த ஒரு வீரர் ஆகியோருடன் சம்பந்தப்பட்ட பஸ்ûஸ சோதனை செய்ய அவர் முடிவு செய்தார்.

அப்போது, பஸ் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து ஏறத்தாழ 50 மீட்டர் தொலைவில் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. அந்த காரில் இருந்த அடையாளம் தெரியாத 5 பேரிடம் சங்கீதா விசாரணை மேற்கொண்டார்.

காரில் இருந்த ஐந்து பேரில் ஒருவர் "ஆம்னி' பஸ்ஸின் ஓட்டுநர் எனத் தெரியவந்தது. அவரது உதவியுடன் பஸ்ஸின் உள்ளே போலீஸôர் சோதனை நடத்தினர். அங்கு எதுவும் சிக்கவில்லை.

5 பைகளில் கட்டுக்கட்டாக பணம்: பஸ்ஸின் மேல் பகுதியில் சோதனை நடத்துமாறு போலீஸôருக்கு கோட்டாட்சியர் சங்கீதா உத்தரவிட்டதும், பஸ் ஓட்டுநர் என்று கூறிய நபரும், காரில் இருந்த மற்ற நான்கு பேரும் காரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

பஸ்ஸின் மேலே ஏறிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் நாகேசுவரன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 பைகளில் ரூபாய் நோட்டுக் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் கண்டுபிடித்தார்.

5 பைகளில் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் முழுவதும் அதிகாரிகள் முன்னிலையில் எண்ணப்பட்டன. இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு 5 பைகளிலும் மொத்தம் ரூ. 5,11,27,000 இருப்பது தெரிய வந்தது.

கை கொடுத்த விடிஎஸ்: அடையாளம் தெரியாத நபர்கள் விட்டுச் சென்ற கார் யாருக்குச் சொந்தமானது என்பதைக் கண்டறிய மாநகரக் காவல் துறையை தேர்தல் அதிகாரிகள் நாடினர்.

வாகன எண்களைக் கொண்டு உரிமையாளர்களின் முகவரியை கண்டறியும் "விடிஎஸ்' முறையில் தேடியபோது, பொன்னகர் 2-வது தெருவைச் சேர்ந்த உதயக்குமரன் மனைவி உமாமகேசுவரி பெயரில் கார் பதிவு செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.

காரின் உரிமையாளர் உமாமகேசுவரியின் கணவர் உதயக்குமரன்தான் தனியார் பஸ்ஸின் உரிமையாளர்களில் ஒருவர் என்று தெரிய வந்தது. இதையடுத்து, அவரது வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனையில் கணக்கில் வராத ரூ. 81,000 பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற சோதனைகளில் சிக்கிய பணத்தைவிட இப்போது ஒரே இடத்தில் ரூ. 5.11 கோடி சிக்கி இருப்பதால், தேர்தல் பிரிவு அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment