islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

"தேர்தல் என்பது ஊழலின் ஊற்றுக்கண்" - குரைஷி


தேர்தல் என்பது ஜனநாயக நாடுகளில் மிகப்பெரும் ஊழலுக்கு வித்திடும் களமாக மாறிவருகிறது என்று தலைமை தேர்தல் ஆணையர் சலாஹுத்தீன் யாகூப் குரைஷி கவலை தெரிவித்துள்ளார். இந்த ஊழல் பணத்துக்கெதிராகப் போராடுவது தேர்தல் ஆணையத்தின் புதிய, தலையாய பொறுப்புகளில் ஒன்று என்றார் அவர்.


நடைபெற்று வரும் தேர்தல் ஏற்பாடுகளில், தமிழகத்தில் மட்டும் நாளொன்றுக்கு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் "பணம்" கடத்தப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த வெள்ளியன்று, ஜார்க்கன்ட் மாநில திரிணாமூல் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் சுமார் 57 இலட்சம் ரூபாயுடன் டெல்லியிலிருந்து அஸ்ஸாம் மாநிலத்துக்குச் செல்ல இருந்த போது பிடிபட்டார். தனது நிறுவனத்துக்கே அப்பணத்தை எடுத்துச் செல்வதாக அவர் தெரிவித்ததால் அவரை விடுவிக்க வேண்டியதாயிற்று. "அந்தப் பணம் கிடைத்த வழிகளை அவரால் சொல்ல முடிந்தது தான். ஆனால், தேர்தல் நடக்க இருக்கும் அஸ்ஸாமில் அந்தப் பணத்தை எப்படி பயன்படுத்துவார்கள் என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது " என்றார் தலைமை ஆணையர்.

"ஒரு சட்டமன்ற உறுப்பினராக ஆவதற்காக இரண்டு கோடி வரை செலவிடுகிறார்கள் என்றால், பத்து கோடி வரை அதன் மூலம் வருவாய் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்லலாம். இந்தச் செலவின் பொருட்டு குற்றப்பின்னணி உடையவர்களையும் பண முதலைகளையும் வேட்பாளர்கள் 'சார்ந்து' நிற்க வேண்டியதாகிறது. இதனால் 'சட்டம் இயற்றும் தகுதி'க்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், இவர்கள் இதே பண முதலைகளுக்கும் குண்டர்களுக்கும் இவர்கள் வளைந்து கொடுக்க வேண்டியதாகி விடுகிறது " என்றார் குரைஷி.

அது மட்டுமின்றி, "இந்த ஊடகங்களுக்கும் அரசியல் மையங்களுக்கும் உள்ள தொடர்பும் கவலை அளிக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சார தேர்தல் அறிக்கைகளையே 'தலையங்கமாக'த் தீட்டும் ஊடகங்களும் இருக்கின்றனவே " என்று வேதனைப் பட்டார் தலைமை தேர்தல் ஆணையர்.

No comments:

Post a Comment