islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

என்னைச் சாட்சியாக்கக் கூடாது - அசிமானந்தா திடீர் பல்டி!




அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னைச் சாட்சியாக இணைத்து கொள்ள வேண்டுமென முன்னர் சமர்ப்பித்த கோரிக்கையைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என சாமியார் அசிமானந்தா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.



மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், மாலேகான் மற்றும் அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவ அமைப்புகளே ஈடுபட்டன எனவும் அதில் தனக்கும் பங்குண்டு எனவும் சாமியார் அசிமாந்தா நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் பதிவு செய்திருந்தார். அத்தோடு, 2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பு விசாரணையில் தன்னைச் சாட்சியாக சேர்த்து கொள்ள வேண்டும் எனவும் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது திடீரென அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் தன்னைச் சாட்சியாக சேர்த்து கொள்ள வேண்டாம் எனவும் முன்னர் சமர்ப்பித்த மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் கோரி திடீரென மற்றொரு மனுவை நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்துள்ளார். அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கில் அசிமானந்தாவுக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை இம்மாதம் 8 தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட இருக்கும் நிலையில் அவர் திடீரென தன் முந்தைய நிலைபாட்டில் பல்டியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அசிமாந்தாவின் இப்புதிய மனு நீதிமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் தள்ளுபடி செய்யப்பட்டாலும் முன்னர் நிச்சயிக்கப்பட்டிருந்தபடி வரும் 8 ஆம் தேதி அவருக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்பதில் ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் படை உறுதியாக உள்ளது.

No comments:

Post a Comment