islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

அஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணை பொறுப்பு என்.ஐ.ஏ -க்கு!


அஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பான விசாரணை பொறுப்பு தேசிய விசாரணை குழுவுக்கு அளிக்கப்பட்டதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. முதல்வரின் அனுமதி கிடைத்ததும் தேசிய விசாரணை குழு வழக்கு விசாரணையைத் துவக்கும்.

2007 ஆம் ஆண்டு அஜ்மீர் தர்காவில் நடந்த குண்டுவெடிப்பில் மூன்று பக்தர்கள் கொல்லப்பட்டனர். இக்குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணையை தேசிய விசாரணை குழுவுக்கு அளிக்க உத்தரவு வெளியாகியுள்ளது.

இவ்வழக்கு விசாரணையை என்.ஐ.ஏ வசம் ஒப்படைப்பது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை 25 தினங்களுக்கு முன்னர் கூடுதல் தலைமை செயலர் பி.கே. தேவ் கேட்டிருந்தார். மாநில தீவிரவாத எதிர்ப்புப்படை(ஏ.டி.எஸ்) மற்றும் சட்டத்துறையுடன் ஆலோசனை செய்த பின்னர் இவ்வழக்கு தொடர்பான கோப்புகளை முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் விரைவில் இவ்வழக்கை என்.ஐ.ஏ வசம் ஒப்படைப்பதற்கு அனுமதி வழங்குவார் எனவும் தலைமை செயலர் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு, மாலேகான் குண்டுவெடிப்பு, அஜ்மீர் குண்டுவெடிப்புகளிலெல்லாம் ஒரே அமைப்பே ஈடுபட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்றும் அதனால் இவ்வழக்குகளின் விசாரணைகளை என்.ஐ.ஏ தொடரவேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment