islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்கலாம் பாஸ்போர்ட் அலுவலகம் அறிவிப்பு


சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் வெளியிட்டுள்ள அறிக்கை: 2011ம் ஆண்டு புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புவோர் கடைசி நிமிட நெருக்கடியை தவிர்க்கும் வகையில் ஹஜ் கமிட்டியின் ஒதுக்கீடு கடிதத்திற்கு காத்திருக்காமல் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் முதல் பக்கத்தில் சிவப்பு மையால் ஹஜ் பயணி என்று தலைப்பிட்டு வழக்கமான ஆவணங்கள் மற்றும் கட்டணங்களுடன் இயல்பான கால அவகாசத்தில் பாஸ்போர்ட் பெறுவதற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். மாநில ஹஜ் கமிட்டியிடமிருந்து ஒதுக்கீட்டு எண் பெறப்பட்டதும் போலீஸ் சரிபார்த்தல் அறிக்கை பெறப்படாத விண்ணப்பங்களுக்கும் ஹஜ் பிரிவு என்று மாற்றி பாஸ்போர்ட் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment