islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியர்களுக்கு பெருமை-ஆசியா-பசிபிக்கில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 4-வது இடம்



ஆசியா பசிபிக் பகுதியில் உள்ள 16 நாடுகளில் மிகவும் ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஹாங்காங்கைச் சேர்ந்த வர்த்தக ஆலோசனை நிறுவனமான பிஇஆர்சி நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் ஊழல் நாடுகளுக்கு 0 முதல் 10 வரையிலான புள்ளிகளை அந்த நிறுவனம் வழங்கியிருந்தது. அதில் இந்தியா 8.67 புள்ளியைப் பெற்றுள்ளது. இந்தியாவுக்கு முன்னதாக பிலிப்பைன்ஸ் 8.9 புள்ளிகளும், இந்தோனேசியா 9.25 புள்ளிகளும், கம்போடியா 9.27 புள்ளிகளும் பெற்று ஊழல் மிகுந்த நாடுகளில் முன்னணி வகிக்கின்றன.

சீனா 7.93 புள்ளிகளும் வியட்நாம் 8.3 புள்ளிகளும் பெற்றுள்ளன. தாய்லாந்து 7.55 புள்ளிகளுடன் 11-வது இடத்தில் உள்ளது.

ஹாங்காங் 1.10 புள்ளிகளும், ஆஸ்திரேலியா 1.39 புள்ளிகளும், ஜப்பான் 1.90 புள்ளிகளும், அமெரிக்கா 2.39 புள்ளிகளும் பெற்றுள்ளன.

சிங்கப்பூர் 0.37 புள்ளிகள் மட்டும் பெற்று நற்சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தேசிய அளவிலான அரசியல் தலைவர்களைவிட இதர சிறு பதவிகளில் உள்ள தலைவர்களிடமே ஊழல் அதிகம் காணப்படுவதாக அந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment