islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரிப்பு


இந்தியாவின் மக்கள் தொகைய 18 கோடி அதிகரித்திருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுகிறது.


இந்தியாவின் தற்போதைய மக்கள் தொகை 121.02 கோடியாகும். அதேவேளையில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளது. மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை மற்றும் பதிவாளர் ஜெனரல் டாக்டர்.டி.சந்திரமெளலியும் மக்கள் தொகை விபரங்களை வெளியிட்டனர்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கிய விபரங்கள்:

இந்தியாவில் தற்போது 121.02 கோடி மக்களில் 62.37 கோடி பேர் ஆண்களாவர். 58.65 கோடி பேர் பெண்களாவர்.

2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் – 21.15%

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் – 17.64%

கடந்த 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி சதவீதம் 3.90 ஆக குறைந்துள்ளது.

இந்தியாவிலேயே உத்தரப் பிரதேசத்தில் தான் மிக அதிகமான அளவில் மக்கள் வசிக்கின்றனர். அடுத்து மகாராஷ்டிரா மாநிலம் (11.23 கோடி), பீகார் (10.38 கோடி), மேற்கு வங்காளம் (9.13 கோடி), ஆந்திரப் பிரதேசம் (8.46 கோடி) ஆகியவை உள்ளன.

இந்தியாவில் 1000 ஆண் குழந்தைகளுக்கு 914 பெண் குழந்தைகளே உள்ளனர்.

இந்தியாவில் மிக அதிகமான மக்கள் தொகை நெருக்கம் டெல்லியின் வட கிழக்குக் பகுதியில் தான் பதிவாகியுள்ளது. இங்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக 37,346 பேர் வசிக்கின்றனர்.

அருணாசலப் பிரதேசத்தின் திபாங் பள்ளத்தாக்கில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு சராசரியாக ஒரே ஒருவர் தான் வசிக்கிறார். இந்தியாவிலேயே மிக மிகக் குறைவான மக்கள் நெருக்கம் உள்ள பகுதி இது தான்.

டெல்லிக்கு அடுத்தபடியாக சண்டீகரில் மக்கள் நெருக்கம் மிக அதிகமாக உள்ளது.

கல்வியறியைப் பொறுத்தவரை இந்தியாவில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 74.04 சதவீதம் அதிகரித்துள்ளது. 2001ம் ஆண்டில் இது 64.83 சதவீதமாகவே இருந்தது. பத்தாண்டுகளில் கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 9.21 சதவீதம் அதிகரித்துள்ளது. கல்வியறிவை பெற்றவர்களில் ஆண்களை விட பெண்கள் அதிகமாவர்.

உலக மக்கள் தொகையில் 17.5 சதவீதம்பேர் இந்தியாவில் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment