islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

சாயிபாபா:மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படாத கொலைகள்


18 ஆண்டுகளுக்கு முன்பு பிரசாந்தி நிலையத்தில் நடந்த ஆறு கொலைகள் குறித்த மர்மம் சாயிபாபாவின் மரணத்தைத் தொடர்ந்து மீண்டும் விவாதத்தை கிளப்பும்.

ஆரம்பத்தில் போலீசும்,பின்னர் சி.பி.ஐயும் இதனைக் குறித்து விசாரணை நடத்திய பொழுதும் இச்சம்பவத்தின் பின்னணியைக் குறித்து உண்மையை வெளிக்கொணர இயலவில்லை. மேல்மட்ட தலையீடுதான் உண்மை வெளிவர தடையாக மாறியது என குற்றச்சாட்டு எழுந்திருந்தது.

1993 ஜூன் 6-ஆம் நாள் 25 க்கும் 40 வயதுக்குமிடையேயான பருவமுடைய நான்கு மாணவ பக்தர்களும், ஆசிரமத்தில் வசித்த இருவரும் கொல்லப்பட்டனர். சாயிபாபாவுடன் மிக நெருங்கிய பிரசாந்திநிலையத்தில் வசித்து வந்தவர்கள்தாம் கொல்லப்பட்டவர்களாவர். கத்திகளுடன் பாபாவின் அறைக்குள் நுழைய முயன்ற இளைஞர்களை தடுக்க முயன்றபோது பாபாவின் அந்தரங்க உதவியாளர் ராதாகிருஷ்ணனும், ஆசிரமத்தில் வசித்த இன்னொரு நபரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். ரகளையை கேட்ட சாயிபாபா பின்வாசல் வழியாக தப்பிவிட்டார் என கூறப்பட்டது.

பாபாவின் அறையில் நுழைந்த நான்கு இளைஞர்களும் சம்பவத்தை அறிந்து அங்கு சென்ற ஆயுத போலீஸ் அவர்களை சுட்டுக்கொன்றது.

சாயிபாபாவின் பக்தர்களான நான்கு மாணவர்களும் பாபாவை கொலைச்செய்ய வந்தனர் என ஆசிரமத்தின் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். அறையை திறந்தபொழுது மாணவர்கள் கத்தியுடன் தாக்குதல் நடத்த முயன்றபொழுது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக இதுத்தொடர்பான போலீஸின் அறிக்கையாகும். ஆனால், இதனைக் குறித்து விசாரித்த மத்திய புலனாய்வுத்துறை போலீஸின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது எனவும், மர்மமானது எனவும் கூறியிருந்தது.

நான்கு மாணவர்களும் கொலைச் செய்யப்பட்டுள்ளனர் என முன்னாள் ஆந்திர மாநில உள்துறை அமைச்சரின் செயலாளர் வி.பி.பி நாயரும் கூறியிருந்தார். கத்தியை மட்டும் கையில் வைத்திருந்ததாக கூறப்படும் மாணவர்களை கைது செய்வது எளிதாக இருக்கும் வேளையில் சுட்டுக் கொல்லக் காரணம் சம்பவத்தின் பின்னணியில் உள்ள ரகசியம் வெளிவந்துவிடக் கூடாது என்பதுதான் என அவர் அறிக்கையை அளித்திருந்தார்.

ஆனால், வழக்கு எந்த முடிவும் இல்லாமல் அந்தரங்கத்தில் தொங்கியது. ஆறுபேரின் மரணத்திலும் வழக்கத்திற்கு மாற்றமான ஒன்றும் நிகழவில்லை எனக்கூறி சி.ஐ.டி பிரிவு விசாரணையை முடித்தது. தொடர்ந்து சி.பி.ஐ விசாரணையை ஏற்றுக்கொண்ட போதிலும் மேல்மட்ட தலையீடு காரணமாக விசாரணை நிலைத்துப்போனது. விசாரணை அறிக்கையை சி.பி.ஐ சமர்ப்பிக்கவில்லை.

பி.பி.சியின் ஆவணப்படமான ‘தி ஸீக்ரட் சுவாமி’ யில் பத்திரிகையாளர் தனியா தத்தா சாயிபாபாவின் படுக்கை அறையில் நடந்த கொலை வழக்கு முடங்கிப் போனதுக் குறித்து விவரிக்கிறார். சில போலீஸ் அதிகாரிகளை கைது செய்த போதும் குற்றம் சுமத்தாமல் வழக்கு கைவிடப்பட்டது.

சாயிபாபாவுக்கு உயர்போலீஸ் அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. பாபாவை விசாரிக்கவோ வாக்குமூலம் வாங்கவோ கூட போலீஸ் தயாராகவில்லை. இந்திய பத்திரிகையாளர்கள் செய்தியை மூடிமறைத்ததாக பி.பி.சி குற்றஞ்சாட்டுகிறது. ஆசிரமத்தில் நடந்த கொலை உள் பிரச்சனை எனவும், இதுக்குறித்து எந்த ஏஜன்சியின் விசாரணையும் தேவையில்லை என பிரசாந்தி நிலையம் அதிகாரப்பூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவித்தது.

சாயிபாபாவின் அனைத்து ரகசியங்களையும் தெரிந்த ராதாகிருஷ்ண மேனனை கொன்றதுதான் இந்த சம்பவத்தின் பின்னணி என பின்னர் குற்றச்சாட்டு எழுந்தது. அறக்கட்டளை உறுப்பினர்கள் திட்டமிட்டு நடத்தியவைதான் இந்த கொலைகள் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

1987-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி ஆசிரமத்திற்கு உள்ளே 20 வயதான மாணவனின் உடல் எரிந்துபோன நிலையில் கண்டெடுக்கப்பட்ட போதும் சர்ச்சை கிளம்பியிருந்தது. சூழ்நிலை ஆதாரங்கள் கொலை என தெரிவித்த போதும் தற்கொலை எனக்கூறி போலீஸ் வழக்கை மூடியது.
thoothu

No comments:

Post a Comment