islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹஜ் புனித பயணம்: 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு சலுகை


ஹஜ் புனிதப் பயணம் செல்ல விண்ணப்பிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் அவருடன் துணையாகச் செல்லும் மேலும் ஒருவருக்கும் பயணம் உறுதி செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு ஹஜ் குழு வெளியிட்டுள்ள செய்தி:

2011 மார்ச் 31-ம் தேதியன்று 70 வயது பூர்த்தியான புனிதப் பயணி, தம்முடன் ஒரே ஒரு சக பயணியுடன் விண்ணப்பித்தால் இந்த ஆண்டு (2011) ஹஜ் பயணத்தில் அவர்களுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் அளிக்கப்படும். ஹஜ் பயணத்துக்கு ஏற்கெனவே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து உறை எண்களைப் பெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள், தம்முடன் சக பயணியாக யாரை அழைத்துச் செல்ல உத்தேசித்துள்ளார் என்பதைத் தெரிவிக்குமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் அந்தப் பயணிகளுக்கு உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்க இயலும். திருத்தப்பட்ட இந்தத் தகுதி குறித்த விவரங்கள், www.hajcommittee.com என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.

70 வயது பூர்த்தியான விண்ணப்பதாரர்கள் இதுவரையில் விண்ணப்பிக்காமல் இப்போது விண்ணப்பிக்க விரும்பினால் அப்படிப்பட்ட பயணிகள் தங்கள் விண்ணப்பங்களுடன் அவர்கள் தம்மோடு அழைத்துச் செல்ல விரும்பும் சக பயணியின் விவரத்துடன் ஹஜ் பயணம் செல்ல முடிவு செய்துள்ளதை தனியே தெரிவித்தால், அவ்வகை பயணிகளுக்கு இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கான உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் வழங்கப்படும். இந்த வகையில் உறுதி செய்யப்பட்ட இருக்கைகள் பாஸ்போர்ட் வைத்துள்ள 70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணி மற்றும் சக பயணி ஆகியோருக்கு மட்டுமே வழங்கப்படும். 70 வயதுக்கு மேற்பட்ட பயணிகள் தங்களின் ஹஜ் பயணத்தை ரத்து செய்தால் எக்காரணத்தைக் கொண்டும் சக பயணிகள் தனியே புனிதப் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெளிவுபடுத்தப்படுகிறது.

70 வயதுக்கு மேற்பட்ட ஹஜ் பயணிகளின் விண்ணப்பங்களையும் பொதுவான விண்ணப்பங்களையும் சமர்பிக்கும் கடைசி தேதி வரும் சனிக்கிழமை (ஏப்ரல் 30). இதில் மாற்றம் ஏதுமில்லை.

No comments:

Post a Comment