தமிழகத்தில் வரும் மே மாதம் 16-ம் தேதி முதல் மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படவிருப்பதாக மருத்துவக்கல்வி துறை இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மருத்துவக்கல்வி துறை இயக்குனர் ஷீலா நிருபர்களிடம் கூறியதாவது,
இதுதொடர்பான அதிகாரப்பூர்வ விளம்பர அறிவிப்பு மே மாதம் 15-ம் தேதி வெளியிடப்படும். மே 16-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் ஜூன் மாதம் 2-ம் தேதிக்குள் அலுவலகத்தை சென்றடைய வேண்டும். ஜூன் 21-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
மாற்றுத்திறனாளிகள், ஸ்போர்ட்ஸ் கோட்டா பிரிவினருக்கான கவுன்சிலிங் ஜூன் மாதம் 30-ம் தேதியும், மற்ற பிரிவினர்களுக்கான கவுன்சிலிங் ஜூலை 1-ம் தேதியிலிருந்து 10-ம் தேதி வரை நடைபெறவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 17 அரசு மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் உள்ள 1, 945 இடங்களில் அனைத்து இந்திய அளவிலான ஒதுக்கீட்டில் 292 இடமும், மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் ஆயிரத்து 653 இடங்களும் பகிர்ந்து கொள்ளப்படும். தனியார் சுய நிதி மருத்துவக்கல்லூரியில் உள்ள மொத்தம் ஆயிரத்து 10 சீட்களில், மானேஜ்மென்ட் வகைக்கு 375 சீட்களும், மீதி 635 மாநில அரசு அளவிலான ஒதுக்கீட்டில் பகிர்ந்து கொள்ளப்படும்.
தமிழகத்தில் ஒரு அரசு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இதில் உள்ள 100 சீட்களில் 15 சதம் அனைத்து இந்தியகோட்டாவின்படியும், மாநில அரசுக்கு 85 சதமும் பிரித்து சேர்க்கை நடக்கும். தனியார் பல் மருத்துவக் கல்லூரி மொத்தம் 17 உள்ளது. இதில் ஆயிரத்து 420 சீட்களில் 529 மானேஜ்மென்ட் கோட்டாவும், மாநில அரசு கோட்டா 891 சீட்டும் பகிரப்படும்.
English summary
No comments:
Post a Comment