இங்கிலாந்தில் காச நோயை பரப்புவதில் இந்தியர்கள் முக்கிய பங்கு வகித்து வருவதாக அந் நாட்டு மருத்துவ ஏடான லான்செட் குற்றம் சாட்டியுள்ளது.
இங்கிலாந்தில் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் பாதி பேர் இந்தியாவிலிருந்து குடியேறியவர்கள் தான் என்று அந்த இதழ் கூறியுள்ளது. இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் 4.3 லட்சம் பேர் இங்கிலாந்துக்கு வருவதாகவும், இதில் 5ல் ஒருவர் டி.பி எனப்படும் காச நோய் கிருமியை ஏந்தி வருவதாகவும் அந்த ஏடு கூறி்யுள்ளது.
லண்டன், லீட்ஸ், பிளாக்பர்ன் ஆகிய நகரங்களி்ல் வந்திறங்கிய வெளிநாட்டவர்கள் மத்தியில் தாங்கள் நடத்திய விரிவான ஆய்வில் இந்த விவரம் தெரியவந்துள்ளதாக லான்செட் கூறியுள்ளது.
ஆனால், லான்செட்டின் இந்தக் கட்டுரைக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் சூப்பர் பக் விஷயத்தில் இந்தியா மீது இந்த ஏடு பழி சுமத்தியது. உலகெங்கும் காணப்படும் இந்த நோய்க் கிருமிக்கு நியூடெல்லி மெடல்லோ பீடா லேக்டமேஸ் என்று பெயரிட்டு, இது ஏதோ டெல்லியிலிருந்து பரவியது போல பிரமையை பரப்பியது.
இந் நிலையில் இப்போது டிபி விஷயத்தில் இந்தியா மீது அடுத்த தாக்குதலைத் தொடர்ந்துள்ளது.
No comments:
Post a Comment