islam
அஸ்ஸலாமு அலைக்கும்...
கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால்
கஷ்மீரில் சிவில் சர்வீஸ் என்ற இந்திய குடியுரிமை பணி தேர்வில் வெற்றி பெற்ற முதல் முஸ்லிம் பெண்மணியான உவைஸா இக்பால் மக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். முன்னர் நடத்திய இரண்டு முயற்சிகளும் தோல்வியை தழுவினாலும் மூன்றாவது முறையாக கடினமாக முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உவைஸா இக்பால் ஆழ்ந்துள்ளார். கஷ்மீரிகள் அனுபவித்துவரும் அநீதமும், சுரண்டலும் முடிவுக்கு வர அவர்கள் அதிகாரமையங்களில் பங்கேற்பது தான் ஒரே வழி என்பது உவைஸாவின் கருத்தாகும்.
லடாக் பகுதியில் உள்ள சச்சூட்டி கிராமத்தில் உவைஸா பிறந்தார். ஒரு விவசாய குடும்பத்தில் பிறந்த பெண் ஒருவருக்கு சிவில் சர்வீஸ் போன்ற உயர் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எளிதான காரியமல்ல. ஆறுமாதத்திற்கும் மேலாக தொடரும் கடுமையான பனி இதற்கு பெருந்தடையாக மாறும். குளிர்காலத்தில் கடுமையான பனிப்பொழிவின் காரணமாக இப்பிரதேசம் முற்றிலும் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசமாக மாறும்.
சண்டிகரிலிருந்து கெமிக்கல் எஞ்சீனியரிங் பட்டம் பெற்ற உவைஸா இக்பாலுக்கு அவருடைய தோழிகள் எம்.பி.ஏ படிக்க கூறிய போதும், மக்களுக்கு சேவைபுரியவும், கஷ்மீரிகளின் நிலைமையை மாற்றவும் தன்னால் இயன்றதை செய்வதற்கு சிவில் சர்வீஸ் தான் சிறந்தது என முடிவெடுத்து அதில் களமிறங்கினார்.
எம்.பி.ஏ படித்த பிறகு கிடைக்கும் பொருளாதார ஆதாயம் குறித்து தோழியர்கள் கூறும் பொழுது அதில் தனக்கு விருப்பம் தோன்றவில்லை என உவைஸா கூறுகிறார். 2008-ஆம் ஆண்டு எழுதிய தேர்வில் ஆரம்பக்கட்ட (Preliminary Exam) தேர்வில் கூட உவைஸாவால் வெற்றி பெற இயலவில்லை.
கடினமான முயற்சியில் அடுத்த ஆண்டு தேர்வு எழுதிய போதும் முதல் கட்டங்களை தாண்டிய உவைஸா கடைசி தேர்வில் தோல்வியை தழுவினார். இதற்கிடையே கஷ்மீர் அட்மினிஸ்ட்ரேடிவ் தேர்வில் (கெ.எ.எஸ்) வெற்றி பெற்றாலும் தேசிய அளவிலான சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெறுவது தான் உவைஸாவின் குறிக்கோளாக அமைந்தது. அதனை சாதித்துவிட்டார் அவர்.
thoothu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment