islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

முதல் அமைச்சர் ஜெயலலிதா போட்ட முதல் கையெழுத்து




தமிழக முதல்வராக 16.05.20111 அன்று பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா, மாலையில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். தனது போயஸ் கார்டன் வீட்டிலிருந்து கிளம்பி சரியாக மாலை 6.40 மணியளவில் கோட்டை வந்த அவருக்கு, அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மலர் கொத்து கொடுத்து வரவேற்றனர்.

கோட்டையில் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதா தனது முதல் உத்தரவாக, படித்த ஏழைப் பெண்களுக்கு திருமண நிதி உதவியாக தற்போது வழங்கப்பட்டு வரும் 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (அரை சவரன்) தங்கம் இலவசமாக வழங்கப்படும் எனும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆணை பிறப்பித்து அதற்குரிய கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

இரண்டாவதாக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளமோ பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு வழங்கப்படும் மாத உதவித் தொகை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு மேற்காணும் ஓய்வூதிய திட்டங்களின் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு தற்போது வழங்கப்படும் 500 ரூபாய் மாத ஓய்வூதியத்தை 100 ரூபாயாக உயர்த்தி வழங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

பொது விநியோக திட்டத்தில் அரிசி பெறத் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 20 கிலோ அரிசி இலவசமாக வழங்கவும், அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 35 கிலோ அரிசியை இலவசமாக வழங்கிடவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

தமிழகத்தின் கடலோர மீன் வளத்தைப் பாதுகாக்க வேண்டி ஒவ்வொர் ஆண்டும் 45 நாட்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்படும் காலகட்டத்தில் பாதிக்கப்படும் மீனவக் குடும்பங்களுக்கு தற்போது வழங்கப்படும் 1000 ரூபாய் உதவித் தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்க ஒப்புதல் அளித்து அதற்கான கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

அரசுப் பணி புரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க மகப்பேறு கால சலுகையாக 6 மாத காலம் மகப்பேறு விடுப்பு அளிக்க ஒப்புதல் அளித்து அதற்குரிய கோப்பில் முதல் அமைச்சர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.

அத்துடன் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவும், அதற்கான திட்டங்களை வகுத்து சிறப்புடன் அமல்படுத்தவும், அரசின் சிறப்புத் திட்டங்களை செம்மையோடு விரைந்து செயல்படுத்தவும் புதிய துறை ஒன்றைத் தொடங்க முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு அதற்கான கோப்பில் கையெழுத்திட்டார். இத்துறை சிறப்புத் திட்டடங்கள் செயலாக்கத்துறை எனும் பெயரில் அழைக்கப்படும். இத்துறைக்கென தனி அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை முதல் அமைச்சர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.



No comments:

Post a Comment