islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாம் -அறிஞர்களின் பார்வை-1-ஆர்தர் ஜே.ஆர்பெர்ரி (Arthur J.Arberry)



குர்ஆனுடைய கருத்துக்களை வெளிக் கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன்.



ஆனால் அரபி மொழியில் குர்ஆனில் இருக்கும் அழகையும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிகக் குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத் துல்லியமாக பின்னி பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன. குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதை உணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச் செய்கின்றன. குர்ஆனின் இந்த விநோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய சொற்களின் ஓசை நயமே மக்களின் கண்களை கசியச் செய்கிறது. உள்ளங்களை பரவசமடையச் செய்கிறது’ என்று பிக்தால் தம் மொழி பெயர்ப்பில் சொன்ன கருத்து எந்த வகையிலும் மிகையானதல்ல.
-The Koran Interpreted , London: Oxford University Press, 1964, Page 10

No comments:

Post a Comment