islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

தமிழ்நாட்டில் 29 சதவீத எம்.எல்.ஏக்கள் க்ரிமினல்கள்


தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 29 சதவீத எம்.எல்.ஏக்களும் குற்றவியல் வழக்குகளில் தொடர்புடையவர்களாவர்.

புதுச்சேரியில் 30 சதவீதம் எம்.எல்.ஏக்களும் குற்றவாளிகளாக வழக்குகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.நேசனல் எலக்‌ஷன் வாட்ச் மற்றும் அசோசியேசன் ஃபார் டெமோக்ரேடிக் ரிசர்ச்சும் இணைந்து நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.

தமிழ் நாட்டில் மக்கள் ஏழைகளின் பாங்காளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட 52 சதவீதம் எம்.எல்.ஏக்களும், புதுச்சேரியில் 63 சதவீத எம்.எல்.ஏக்களும் கோடீஸ்வரர்களாவர்.234 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவையில் 66 எம்.எல்.ஏக்களின் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 36 பேர் மீது கொலைக்குற்றமும், கொலைமுயற்சி, வழிப்பறி போன்ற கடுமையான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆளுங்கட்சியான அ.இ.அ.தி.மு.கவின் 147 எம்.எல்.ஏக்களில் 46 பேரும், தி.மு.கவின் 23 உறுப்பினர்களில் ஏழுபேரும், சி.பி.எம்மின் பத்துபேரில் மூன்று எம்.எல்.ஏக்களும், பா.ம.கவின் 3 எம்.எல்.ஏக்களில் 2 பேரும் வழக்குகளில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் 30 சட்டமன்ற உறுப்பினர்களில் ஒன்பது பேர் மீது க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆளுங்கட்சியான ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸின் ஐந்து பேர் மீதும், அ.இ.அ.தி.மு.கவின் 3 பேர் மீதும், தி.மு.கவின் ஒருவர் மீதும் க்ரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.தமிழ்நாட்டின் சட்டப் பேரவையில் 120 எம்.எல்.ஏக்களும், புதுச்சேரியில் 19 பேர் கோடீஸ்வரர்களாவர். தமிழ்நாட்டில் கடந்த சட்டப்பேரவையில் 57 பேர் தாம் கோடீஸ்வரர்களாவர்.

No comments:

Post a Comment