islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹஜ் பயணிகள் குலுக்கல்: மே 24-க்கு தள்ளிவைப்பு


ஹஜ் பயணம் செல்வோரை தேர்ந்தெடுக்க நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குலுக்கல், இம் மாதம் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் நிர்வாக அலுவலர் கே.அலாவுதீன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்திலிருந்து ஹஜ் பயணம் செல்வோரை தேர்ந்தெடுக்க இம் மாதம் 17-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த குலுக்கல் நிர்வாக காரணங்களால், இம் மாதம் 24-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது.
இந்த குலுக்கல் சென்னை ராயப்பேட்டை புதுக் கல்லூரியில் 24-ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment