islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பெரியகோவிலை வைத்து பார்ப்பன தினமலர் பரப்பும் மூடநம்பிக்கை!



ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.


இந்தத் தேர்தலில் கொங்குவேளாளர், தேவர், நாடார், நாயுடு முதலான ஆதிக்க சாதி சங்கங்கள் – கட்சிகள் எந்தெந்தக் கூட்டணியை ஆதரித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். ஆனால் தமிழ்நாடு பிராமணர் சங்கம் அ.தி.மு.கவையும், ஜெயலலிதாவையும் ஆதரித்த்து எத்தனை பேருக்குத் தெரியும்? தேர்தல் முடிவு குறித்து தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் அங்கத்தினர்கள் வீட்டில் வடை பாயாசத்தோடு கொண்டாடி வருவது குறித்து அறிவீர்களா? ஆதாரம் வேண்டுவோர் அந்தக் கொண்டாட்டத்தை தினுசு தினுசாக நடத்தி வரும் தினமலர் பத்திரிகையை புரட்டினாலே போதும்!

இந்துத்வாவின் இந்திய நாயகன் மோடி, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் முதலானோர் ஜெயா பதவி ஏற்பு விழாவில் முக்கிய நாயகர்கள். தமிழகத்தில் பா.ஜ.க தனியாக போட்டியிட்டதெல்லாம் சும்மா ஒரு கண்துடைப்பு. “இதுவரை தமிழகம் கண்ட முதல்வர்களிலே ஒரே இந்து முதல்வர் புரட்சித் தலைவிதான்” என்று பார்ப்பன இந்து முன்னணி இராமகோபாலன் வாயால் பாராட்டப்பட்டிருக்கும் போது தமிழகத்தில் பா.ஜ.க என்று ஒரு அரசியல் கட்சியே தேவையில்லையே?

அப்படித்தான் தினமலரும் ‘அம்மா’வின் அறிவிக்கப்படாத கோயாபல்சாக எழுதி வருகிறது. தினமலரை அதன் விரிவான செய்தி கவரேஜூக்காக வாசகர்கள் பார்க்கிறார்கள் என்றால் வருபவர்களை கையைப் பிடித்து வலுக்கட்டாயமாக போயஸ்தோட்டம் உள்ளிட்ட அக்ரகாரங்களுக்கு அழைத்துச்செல்வதை தினமலர் ஒரு கடமையாகவே செய்கிறது.

ஜெய கும்பலின் வெற்றியை புதிது புதிதாக எழுதி வரும் தினமலர் அதில் ஒன்றாய் இந்த பெரிய கோவில் சமாச்சாரத்தை வெளியிட்டிருக்கிறது. பெரியகோவிலுக்கு செல்லும் பிரபலங்கள் தமது பதவியையோ இல்லை உயிரையோ இழப்பார்கள் என்பது ஐதீகமாம். ஏற்கனவே இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர், சங்கர்தயாள் சர்மா போன்றவர்களுக்கு அப்படி நடந்திருக்கிறதாம். அவர்கள் உயிரை இழந்தார்களா, இல்லை பதவியை இழந்தார்களா, இல்லை இரண்டையும் இழந்தார்களா என்பதை மட்டும் தினமலர் குறிப்பிடவில்லை.

சென்ற ஆண்டு பெரிய கோவில் கட்டி முடிக்கப்பட்ட ஆயிரமாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக தஞ்சை வந்த கருணாநிதியும் அந்த சென்டிமெண்டை மனதில் கொண்டு முன்வாசல் வழியாக வராமல் பின்வாசல் வழியாக கோவிலுக்கு சென்றாராம். அந்த விழாவில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் அ.ராசா இப்போது திகார் சிறையில் இருக்க கருணாநிதியோ பதவியை இழந்திருக்கிறாராம்.

இதன்படி பார்த்தால் கருணாநிதி இறப்பதற்கு கூட இதுதான் காரணமென்று இப்போதே தினமலர் அறிவித்திருக்கிறது. இருக்கட்டும், ராசா பேசிய அதே விழாவில் நாட்டிய பிரபலம் பத்மா சுப்பிரமணியம் ஆயிரம் நடனக் கலைஞர்களோடு பெரிய கோவிலில் நாட்டிய நிகழ்ச்சி நடத்தினாரே அவரும் பிரபலம்தானே? தினமலர் ஆய்வு முடிவுப்படி அவரும் இதற்கு முன்போ இல்லை கூடிய சீக்கிரமோ மண்டையைப் போடவேண்டுமே? ஒரு வேளை இந்த உயிர் துறக்கும் பெரியகோவில் சாஸ்திரம் தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கு மட்டும் கிடையாதோ?

எப்படியெல்லாம் மூடநம்பிக்கையை வெட்கமற்று அயோக்கியத்தனமான முறையில் பரப்புகிறார்கள் பாருங்கள்! தனது கோவிலுக்கு வரும் பிரபலங்களை ஒரு ஆண்டவன் கொல்கிறான் என்றால் அவன் கடவுளா இல்லை டிராகுலாவா? இதற்கு முன் இப்படி பல பிரபங்களை அந்த பெருவுடையார் கொன்றிருக்கிறான் என்றால் அவன் மீது கொலை வழக்கு பதிவு செய்து குற்றத்தை நிரூபித்து தூக்கில் போடுவதுதானே சரியாக இருக்கும்?

பெரியகோவில் குடமுழுக்கின் போது தீவிபத்து ஏற்பட்டு ஐம்பது பேர் செத்துப் போனார்களே அதற்கு என்ன காரணம்? அதை வைத்து தினமலர் பாணியில் ஒரு செய்தி வெளியிடுவதாக இருந்தால், “தஞ்சை பெரியகோவில் கும்பாபிஷேகம் நடக்கும் போது கண்டிப்பாக ஐம்பது பேர்கள் இறப்பார்கள்” என்றல்லவா இருக்கும்?

சபரிமலையில் ஆண்டுதோறும் நெரிசல் ஏற்பட்டு பல ஐயப்ப்ப சாமிகள் பரிதாபமாக சாகிறார்கள். இன்று கூட திருப்பதிக்கு சென்ற பேருந்து விபத்துக்குள்ளாகி ஐம்பது பக்தர்கள் காயம்பட்டிருக்கிறார்கள். இது போக அமர்நாத், காசி, மதுரா என்று எல்லா பக்தி சுற்றுலாக்களின் போதும் விபத்து நடந்து பலர் சாகிறார்கள். இதையும் தினமலர் பாணியில் “புண்ணிய ஷேத்தரங்களுக்கு சென்றால் மரணம் நிச்சயம்” என்று வெளியிடலாமே? பார்ப்பன தினமலர் அப்படி வெளியிட்டால் பெரியகோவில் சென்டிமெண்டையும் நாம் மன்னித்து விடலாம்.

கொலைகார சங்கரச்சாரி ஜெயேந்திரனை கைது செய்ததால்தான் சுனாமி வந்து ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து போனார்கள் என்று அக்மார்க் பார்ப்பனர்கள் பேசிய நாடல்லவா இது. அதன் நீட்சிதான் தினமலரின் இந்த வக்கிரமான செய்தி.

தினமலரின் இளவல் அந்துமணி என்ற இரமேஷ் தனது அலுவலகத்தில் ஒரு பெண்ணிடம் பாலியல் வன்முறை செய்தார் என்ற செய்தி பல பத்திரிகைகளில் வந்து நாறியதே, அதன்படி தினமலரில் புனைபெயரில் எழுதும் அத்தனைபெரும் பொறுக்கிகள் என்று ஒரு சென்டிமெண்டை நாம் ஏன் ஆரம்பித்துவைக்கக் கூடாது?

கால்வாசி நாட்கள் போயஸ்தோட்டத்திலும், முக்கால்வாசி நாட்கள் கொடநாட்டிலும் ஓய்வு அரசியல் நடத்தும் ஜெயலலிதாவே தொட்டதுக்கெல்லாம் ஜோசியம், பில்லிசூன்யம், யாகம், பரிகாரம் என்று வாழ்கிறவர்தான். முந்தைய ஆட்சிக்காலத்தில் ஊட்டியில் நடந்த கஜமுக யாகத்தை நினைவிருக்கிறதா? தமிழகக் கோவிலில் உள்ள யானைகளையெல்லாம் சித்ரவதை செய்து லாரிகளில் ஏற்றி அலைக்கழித்து ஊட்டி கொண்டு சென்று எப்படியெல்லாம் வதைசெய்து ஆடினார்கள்?

கண்ணகி சிலையை லாரி வைத்து இடித்தது, புதிய சட்டமன்றம் வாஸ்துபடி சரியாக இல்லை என்று கோட்டைக்கு திரும்பியது என்று ஜெயலலிதாவின் பார்ப்பன நம்பிக்கைகளுக்காக மக்கள் பணம் எப்படி விரயமாக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதற்கு சற்றும் குறைவில்லாத படி தினமலரும் தனது பார்ப்பன முட்டாள்தனங்களை கக்கி வருகிறது. இன்னும் ஐந்தாண்டு காலத்தில் இந்தக்கூட்டம் என்னவெல்லாம் ஆடப்போகிறதோ தெரியவில்லை.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும். எடுப்போம்.

ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்லுக்கோதா உபநிடதத்தின் படி பெயரில் வெற்றியை தாங்கியிருக்கும் பெண் ஆட்சியாளரை புகழ்ந்து பாடும் புலவர்கள் (தற்போது பத்திரிகைகள்- அதன் முதலாளிகள், ஆசிரியர்கள்) அனைவரும் சரியாக ஒன்பது மாதங்கள், ஒன்பது வாரங்கள், ஒன்பது நாட்கள், ஒன்பது மணிகள், ஒன்பது நிமிடங்கள், ஒன்பது விநாடியில் ரத்தம் கக்கி சாவார்கள் என்று போட்டிருப்பது நிச்சயம் பலிக்குமாம். ஏனெனில் ஒன்பது என்ற எண் அந்த அல்லிராணியின் ராசியான எண்ணாம்.

இதிலிருந்து தப்ப வேண்டுமென்றால் ஒன்று அந்த அல்லிராணி ஒன்பது மாதங்களுக்குள் ஆட்சியை இழக்கவேண்டும். இல்லையென்றால் அந்தப் புலவர்கள் தங்கள் வாழ்க்கையில் இனி ஒருபோதும் பாட்டு எழுதாமல் இருக்க வேண்டுமாம். ஆக புலவர்கள் பாட்டை நிறுத்தப் போகிறார்களா இல்லை ரத்தம் கக்கி சாகப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
vinavu

No comments:

Post a Comment