islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 3 டன் மாம்பழங்கள் பறிமுதல்


சேலத்தில், ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்டதாக 3 டன் மாம்பழங்களை மாநகராட்சி சுதாகார அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.

சேலத்தில் கடைவீதிகளில் உள்ள கிடங்குகளுக்கு நாள்தோறும் சுமார் 100 டன் மாங்காய்கள் கொண்டு வரப்படுகின்றன. அங்கு பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்காக சிறு வியாபாரிகளுக்கு வழங்கப்படுகிறது.

மாங்காய்களை வைக்கோலுக்குள் வைத்து பழுக்க வைப்பது வழக்கம். இதற்கு 5 நாள்கள் ஆகும். ஆனால், கார்பைடு கற்களை பயன்படுத்தினால் 12 மணி நேரத்துக்குள் பழுத்து விடுகின்றன. அதனால் சில வியாபாரிகள் ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி பழுக்க வைக்கின்றனர். இவற்றை சாப்பிட்டால் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதைத் தடுக்கும் வகையில், மாநகராட்சி நகர்நல அலுவலர் பொற்கொடி மற்றும் அலுவலர்கள் கடைவீதி பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்குள்ள 2 கிடங்குகளில் ரசாயனக் கற்களைப் பயன்படுத்தி மாங்காய்களை பழுக்க வைப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 3 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து பொற்கொடி கூறியது: இயற்கையாக மாம்பழங்களை பழுக்க வைக்க வேண்டும். ரசாயனக் கற்கள் மூலம் பழுக்க வைப்பது சட்ட விரோதமானது. இதுகுறித்து மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுப்பர் என்றார்.

No comments:

Post a Comment