islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

எம்.பி.பி.எஸ். படிப்பிலிருந்து விலகினால் ரூ.5 லட்சம் அபராதம்



எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து ஒரு மாணவர் விலகும் நிலையில் செலுத்த வேண்டிய அபராதத் தொகை ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதிக கட்-ஆஃப் மதிப்பெண் எடுத்து எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. அதிக கட்-ஆஃப் மதிப்பெண் காரணமாக பி.டி.எஸ். படிப்பில் சேர்ந்து விட்டு, அடுத்த கல்வி ஆண்டில் கட்-ஆஃப் மதிப்பெண் குறைவாக இருந்தால் அதிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்களும் உண்டு.

இவ்வாறு எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் ஒரு மாணவர் சேர்ந்த பிறகு, தொடர் கல்வி ஆண்டில் காலியிடம் ஏற்படுவதைத் தடுக்க அதிலிருந்து விலகுவோர் செலுத்த வேண்டிய அபராதத் தொகையை ரூ.5 லட்சமாக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு உயர்த்தியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு எம்.பி.பி.எஸ். படிப்பில் இடம் கிடைக்காத பழைய பிளஸ் 2 மாணவர்களில் 12 பேர், கடந்த ஆண்டு பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். இவர்கள் அனைவரும் கடந்த ஆண்டு அபராதத் தொகையாக தலா ரூ.2 லட்சத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவிடம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

செப்டம்பர் 30-ம் தேதிக்குள்... இந்திய மருத்துவக் கவுன்சிலின் விதிகளின்படி தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும். நடப்புக் கல்வி ஆண்டில் (2011-12) எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பில் சேரும் மாணவர்கள் செப்டம்பர் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் படிப்பிலிருந்து விலகினால் அபராதமாக ரூ.50,000 செலுத்த வேண்டும்; நடப்புக் கல்வி ஆண்டில் செப்டம்பர் 30-ம் தேதிக்குப் பிறகு விலகினாலோ அல்லது அடுத்த கல்வி ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். அல்லது பி.டி.எஸ். படிப்பிலிருந்து விலகினாலோ அபராதத் தொகையாக ரூ.5 லட்சம் செலுத்த வேண்டும்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். விண்ணப்பம்-நிபந்தனைகள்: எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்கள், விண்ணப்பத்துடன் 8-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி ஆதாரச் சான்றிதழ் பிரதி, பிளஸ் 2 இறுதித் தேர்வு "ஹால் டிக்கெட்' ஆகியவற்றை இணைக்க வேண்டும் என இந்த ஆண்டு புதிதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. குடும்பத்தில் முதல் பட்டதாரி தகுதியை (கல்விக் கட்டணம் ரூ.4,000 விலக்கு பெற.) கோரும் மாணவர்கள், அதற்கு உரிய தலைமையக தாசில்தார் சான்றிதழை இணைப்பது அவசியம்.

எம்.பி.பி.எஸ். படிப்பில் விண்ணப்பிக்கும் மாணவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை உறுதி செய்து கொள்ளவே 8-ம் வகுப்பு வரை 12-ம் வகுப்பு வரை படித்த பள்ளி ஆதாரச் சான்றிதழை இணைக்குமாறு கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment