islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

முதல் தலைமுறை மாணவர்களுக்கு நிபந்தனை



எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை) தகுதி கோரும் மாணவர்கள், ஆதாரங்களுக்கான பிரதியை கட்டாயம் வைக்குமாறு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.


எம்.பி.பி.எஸ்., பி.இ. படிப்பில் குடும்பத்தில் முதல் பட்டதாரி (முதல் தலைமுறை பட்டதாரி) தகுதி பெறும் மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது. எம்.பி.பி.எஸ். படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணம் ரூ.10,495-ல், கல்விக் கட்டணம் ரூ.4,000-த்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இதேபோன்று பி.இ. படிப்பில் மொத்த ஆண்டுக் கட்டணத்தில், கல்விக் கட்டணம் ரூ.7,500-க்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது.
நிபந்தனை ஏன்? கடந்த கல்வி ஆண்டில் (2010-11) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்த 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்த மாணவர்களின் எண்ணிக்கை 6,440. இதே போன்று பி.இ. படிப்பில் சேர கடந்த ஆண்டு விண்ணப்பித்த 1 லட்சத்துக்கு 67 ஆயிரத்துக்கு மேற்பட்டோரில், குடும்பத்தில் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 78,000 ஆகும்.
பி.இ. படிப்புக்கான விண்ணப்பத்தின்போது குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடமிருந்து தலைமையக தாசில்தார் ஆதாரச் சான்றிதழ் பிரதியை (ஜெராக்ஸ் பிரதி) அண்ணாபல்கலைக்கழகம் பெற்று, அதை ஆய்வு செய்து கலந்தாய்வின்போது தகுதி கோரிய மாணவருக்கு ஒப்புதல் வழங்குவதை அண்ணா பல்கலைக்கழகம் வழக்கமாகக் கொண்டுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவும் இந்த ஆண்டு எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிக்கும் குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவோரிடம் அதே நடைமுறையைப் பின்பற்ற முடிவு செய்துள்ளது. குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோரி, எம்.பி.பி.எஸ். படிப்பில் ரூ.4,000 கல்விக் கட்டண விலக்கைக் கோருவோருக்கு வசதியாக விண்ணப்ப-தகவல் தொகுப்பேட்டில் விவரங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, குடும்பத்தின் முதல் பட்டதாரிகள் தகுதி கோருவதற்கான தலைமையக தாசில்தார் சான்றிதழ் பிரதியை கட்டாயம் இணைக்க வேண்டும். இவ்வாறு சான்றிதழ் பிரதி இல்லாத விண்ணப்பங்கள், பொதுப் பிரிவு விண்ணப்பங்களாகக் கருதப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி தெரிவித்தார்.
சிறப்புப் பிரிவினர் கவனிக்க: முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், விளையாட்டுகளில் சிறந்து விளங்குவோர் உள்ளிட்ட சிறப்புப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவம் 1 அல்லது படிவம் 2-ஐ பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. கடந்த ஆண்டுகளைப் போன்று மேலே குறிப்பிட்ட சிறப்புப் பிரிவினருக்கு என தனி விண்ணப்ப முறை கிடையாது.
விளையாட்டுப் பிரிவில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு விண்ணப்பிப்போர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழு கவுன்டருக்கு ""நேரில் வந்து கொடுப்பது'' அவசியமாகும் என்றார் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி.

No comments:

Post a Comment