islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இறைத்தூதரை அவமதித்த மாத இதழின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி டெல்லியில் முஸ்லிம்கள் போராட்டம்


காமிக் வேர்ல்டு என்ற மாத இதழ் இஸ்லாத்தின் இறுதித்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களைக்குறித்து மோசமான கற்பனை சித்திரங்களும், பொய்கள் அடங்கிய வாழ்க்கை சரித்திரத்தையும் அச்சடித்து வெளியிட்டுள்ளது.

முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கும் நபிகளாரின் மீது கடந்த சில ஆண்டுகளாக உலகின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்வின் காரணமாக அவதூறுகளை அள்ளி வீசுவது தொடர்கதையாக மாறிவிட்டது. இதன் தொடர்ச்சியாக டயமண்ட் காமிக்ஸ் பப்ளிசிங் ஹவுஸ் டெல்லியிலிருந்து பிரசுரித்த காமிக் வேர்ல்ட் டைஜஸ்ட் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பதிப்புகளை வெளியிட்டது.இதில் நபி(ஸல்)அவர்களைக்குறித்த மோசமான கற்பனை சித்திரங்களும், அவர்களுடைய வாழ்க்கை சரித்திரத்தை திரித்து, பொய்களை கலந்து மாத இதழில் வெளியிட்டுள்ளது. முஸ்லிம்கள் அல்லாஹ்வின் அவதாரமான(அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!) முஹம்மது நபியின் படங்களுக்கு முன்பு பூஜை செய்வதாகவும், நபிகளார் தனது காலத்தில் உலகின் பல பகுதிகளுக்கு சென்று மக்கள் அச்சுறுத்தியதாகவும் ’இறைத்தூதர் முஹம்மது யார்?’ என்ற தலைப்பில் அப்பத்திரிகை வெளியிட்டுள்ளது.இதனை கண்டித்து முஸ்லிம்கள் டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தினர்.நபி(ஸல்)அவர்களை அவமதித்த காமிக் வேர்ல்ட் பத்திரிகையின் மீது பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது

No comments:

Post a Comment