islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நாயுடன் வாக்கிங் போனால் அபராதம் : ஈரானில் புது சட்டம்



ஈரானில் செல்லப்பிராணியாக வளர்க்கப்படும் நாய்களை பார்க், ஹோட்டல் போன்ற பொது இடங்களில் அழைத்து வந்தால் நாயின் உரிமையாளருக்கு . 5000 டாலர் அபராதம் விதிக்க பார்லிமென்ட்டில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஈரானில் நாட்டில் பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்லப்பிராணிகளாக நாயினை வீட்டில் வளர்த்து வருகின்றனர். இவர்கள் மேற்கத்திய கலாச்சாரத்தினை பின்பற்றி இவைகளை பொது இடங்களில் அழைத்து வருவது சில நேரங்களில் இடையூறாக உள்ளதாக புகார் எழுந்தது. மேலும் ஈரானில் மத சட்டப்படி இது அருவருக்கத்தக்க ஒன்றாக கருதப்பட்டது. இதனை தடுக்க அந்நாட்டு பார்லிமென்டில் ஏறத்தாழ 39- எம்.பி.க்கள் சட்ட ம‌‌சோதா ஒன்றினை தாக்கல் செய்தனர். இந்த மசோதாவில் செல்லப்பிராணி என்ற பெயரில் நாய்களை வளர்ப்பவர்கள் அவைகளை பொதுஇடங்களான பார்க், ரெஸ்டரண்ட், போன்ற இடங்களுக்கு நடை‌பயிற்சிக்காகவோ, வாகனங்களிலோ அழைத்து வரக்கூடாது மீறினால் நாயின் உரிமையாளரிடமிருந்து 5 மில்லியன் ரியாத் அல்லது 5000 டாலர் அபாரதம் விதிக்கப்படும். மேலும் உரிமையாளரிடமிருந்து நாயினை பறிமுதல் செய்யும் வகையில் சட்டம் கொண்டு வந்தனர். ஈரான் நாட்டிற்கு அவமதிப்பை தரும் இந்த செயல்களை இனி யாரும் செய்யக்கூடாது என்றும். நாயின் உரிமையாளர்கள் இந்த சட்டத்தினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் காவல்துறையில் வளர்க்கப்படும் மோப்ப நாய்களுக்கு விதிவிலக்குஅளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் அயோதுல்லா நாஸர் மக்ரீம் ஷிராசி என்ற எம்.பி. இச்சட்டத்தினை கொண்டு வர வலியுறுத்தினார்.
dinamalar

No comments:

Post a Comment