islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

உலகின் மிகவும் வயதானவர் காலமானார்


உலகில் 114 வயது வரை வாழ்ந்து வந்தவர்களில் ஆறாவது இடத்தை பிடித்திருந்தவர் இன்று காலமானார்.

இங்கிலாந்து நாட்டில், 1896ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் தேதி பிறந்தவர் வால்டர் புரூனிங். இவர் தனது 16ம் வயதில் அங்குள்ள கிரேட் நார்த்தர்ன் ரயில்வேயில் வேலைக்கு சேர்ந்தார்.

ஐம்பது ஆண்டுகள் அங்கேயே பணியாற்றிய அவர், உடன் பணியாற்றி வந்த ஆக்னஸ் என்பவரையே திருமணம் செய்து கொண்டார். அவரது மனைவி ஆக்னஸ், 1980ம் ஆண்டு காலமானார். அவர் அப்போது முதல், அமெரிக்காவில் மோன்டானா பகுதியில் வசித்து வந்தார்.


கடந்த ஏப்ரல் மாதம் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலமானார்.

No comments:

Post a Comment