islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

நீங்களும் ஐ.ஏ.எஸ். ஆகலாம்


ப. சங்கர்,
இயக்குனர், சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமி

மத்திய தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் போன்ற பணிகளுக்கான விளம்பரம் அண்மையில் வெளியாகி உள்ளது. இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகள் இந்தியாவின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த அரசுப் பணித் தேர்வாகக் கருதப்படும், இத்தேர்வின் மூலம் இந்த ஆண்டு 880 பேர் வரை தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதற்கான முதல்நிலைத் தேர்வு வரும் ஜூன் 12-ஆம் தேதியும் முதன்மைத்தேர்வு அக்டோபர் 29-ஆம் தேதியும் நடைபெற உள்ளன. ஆனால் இந்த வருடம் சில மாற்றங்களுடன் முதல்நிலைத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதனைப்பற்றி சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் இயக்குனர் சங்கர் அவர்கள் தரும் விளக்கம்

இந்திய ஆட்சிப் பணித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்கள்தான், இந்தியன் அட்மினிஸ்ட் ரேட்டிவ் சர்வீஸ் (ஐ.ஏ.எஸ்), இந்தியன் போலீஸ் சர்வீஸ் (ஐ.பி.எஸ்.) இந்தியன் ஃபாரின் சர்வீஸ் (ஐ.எப்.எஸ்.), இந்தியன் ஆடிட் அண்ட் அக்கவுண்ட்ஸ் சர்வீஸ், இந்தியன் கஸ்டம்ஸ் அண்ட் சென்ட்ரல் எக்ஸ்சைஸ் சர்வீஸ், இந்தியன் இன்பர்மேஷன் சர்வீஸ், இந்தியன் ரயில்வே பர்சனல் சர்வீஸ்? உள்ளிட்ட நாட்டின் மிக முக்கியமான 25 சிவில் சர்வீஸ் பணிகளில் சேர முடியும். இந்த சிவில் சர்வீஸ் தேர்வுகளை யு.பி.எஸ்.சி நடத்துகிறது. ஏதேனும் ஒரு பட்டப் படிப்பில் குறைந்தபட்ச தேர்ச்சி பெற்றிருந்தால் கூட இந்திய ஆட்சிப் பணித்தேர்வுகளை எழுத முடியும். அதோடு 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த தேர்வை எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்கள் இந்திய நிர்வாகப் பணிகளில் சேர்ந்து நாட்டின் கொள்கை ரீதியான பல முடிவுகளை எடுக்கும் உயர்ந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள்.

இந்தத் தேர்வுகள் இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டமாக நடைபெறும் பிரிலிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் மட்டுமே இரண்டாம் கட்டமாக நடைபெறும் மெயின் தேர்வுகளில் கலந்து கொள்ள முடியும். இத்தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களின் திறமையின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு நியமிக்கப்படுகிறார்கள்.

இந்த வழக்கமான தேர்வு முறையில், தற்போது முதல் நிலைத் தேர்வு எனப்படும் பிரிலிலிமினரி தேர்வில் மட்டும் மாற்றம் கொண்டுவந்திருக்கிறது மத்திய அரசுத் தேர்வாணையம். (மெயின் தேர்வில் மாற்றங்கள் கொண்டுவரப்படவில்லை) கடந்த ஆண்டுவரை இருந்த பிரிலிமினரி எனப்படும் முதல் நிலைத் தேர்வில் இரண்டு பகுதிகள் இருந்தன. கொள்குறி வகை முறையில் (Objective Type) வினாக்கள் கேட்கப்படும். முதல் தாள் ஜெனரல் ஸ்டடீஸ். அதாவது பொது அறிவு குறித்த பிரிவாக 150 மதிப்பெண்களுக்கும், இரண்டாவது தாள் விருப்பப்பாடமாக 300 மதிப்பெண்களுக்கும் இருக்கும். அதாவது, வேளாண்மை, கால்நடை மருத்துவ அறிவியல், கணிதம், தாவரவியல், வேதியியல், சிவில் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், மருத்துவ அறிவியல், தத்துவம், இயற்பியல், வணிகவியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங், பொது நிர்வாகம், புவியியல், சமூகவியல், ஜியாலஜி, புள்ளியியல், இந்திய வரலாறு, விலங்கியல், சட்டம் ஆகிய 23 பாடங்கள் விருப்பப் பாடமாக இருந்து வந்தது. இந்த இரண்டு தேர்வுகளுக்கும் தேர்வு நேரம் 2 மணிநேரம் ஆக பிரிலிலிமினரி தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 450 ஆக இருந்து வந்தது. இந்தத் தேர்விகளில் தவறான பதிலை எழுதி னால் நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும்.

இனி இந்த ஆண்டிலிலிருந்து பிரிலிலிமினரி தேர்வில் இரண்டு தாள்கள் இருக்கும். ஒவ்வொன்றுக்கும் 200 மதிப்பெண்கள். அதன் முதல்தாள் "ஜெனரல் ஸ்டடீஸ்' எனப்படும் பொது அறிவுத் தாளில் ஏற்கனவே இருந்த பல பாடங்கள் தற்போதும் இடம் பெற்றுள்ளன. தேசிய மற்றும் உலகப் புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆட்சியியல், பொருளாதார சமூக துறைகளில் முனைப்பான நடவடிக்கை, சுற்றுச்சூழுல், சூழியியல், பல்லுயிர் பெருக்கம், பருவநிலை மாற்றம் போன்ற சிவில் சர்வீஸ் பணிகளில் அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்வது குறித்து முதல் தாளில் கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இத்தேர்வுக்கு 200 மதிப்பெண்கள்.

இரண்டாம் தாள் முற்றிலும் திறனறித் தேர்வாக (Civil Service Aptitude Test - CSAT) மாற்றப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்து வந்த விருப்பப் பாடம் இனி இருக்காது. இந்தத் தாளில் காம்ப்ரிஹென்சன், கம்யூனிகேசன் ஸ்கில்ஸ் உள்பட இன்டர் பர்சனல் ஸ்கில்ஸ், லாஜிக்கல் ரீசனிங் அண்ட் அனலிட்டிக்கல் எபிலிலிட்டி, டெசிசென் மேக்கிங் அண்ட் ப்ராப்ளம் சால்விங், ஜெனரல் மென்டல் எபிலிலிட்டி, பேசிக் நியூமரஸி. இங்கிலீஷ் லாங்க்வேஜ் காம்ப்ரிஹென்ஷன் ஸ்கில்ஸ் என்று பாடத் திட்டமே லேசாக பதட்டம் கொள்ளவைக்கிறது. கணிதத்திற்கும் ஆங்கிலப் புலமைக்கும் தீனி போடுவதற்கு ஏதுவாக இந்தப் புதிய பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் நடைபெறும் இந்த இரண்டாம் தாளுக்கான மதிப்பெண்கள் 200. ஆனால் இதுதான் இப்போது பெருத்த விவாதத்துக்கு உள்ளான ஒன்றாகியுள்ளது. இந்த ஆப்டிடியூட் பாடம் இதுவரை நம் தமிழக மாணவர்களுக்கு எந்தப் பள்ளி, கல்லூரிகளிலும் கற்றுத்தரப்படுவதில்லை. அதனால் இனி கிராமப்புறம் மற்றும் தமிழ்வழியில் பயிலும் மாணவர்களால் ஐ.ஏ.எஸ். என்பதை நினைத்தும் பார்க்க முடியாது என்ற அச்சம் பரவலாக கிளறிவிடப்படுகிறது. ஐஐடி, ஐஐஎம் மனதில் வைத்துத்தான் CSAT கொண்டு வரப் பட்டதோ என்ற சந்தேகம் கிராமப்புற மாணவர்கள் மத்தியில் இதனால் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இத்தேர்வு மாற்றத்தால் யாரும் பயம் கொள்ளத் தேவையில்லை. மனப்பாடத்திற்கும் ஞாபக சக்திக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்த பழைய தேர்வு முறையை விட இந்த முறை தகுதியானவர்களை பிரித்தறிய வாய்ப்பாக இருக்கும். உதாரணமாக ஒரு பிரச்னைக்கான சூழலைக் கேள்வியாகக் கேட்டு நான்கு விதமான தீர்வுகளில் மிகப் பொருத்தமான ஒன்றை நம் பதிலாகக் கேட்பார்கள். தேர்வர் அதிக உணர்ச்சிவயப்படக்கூடியவரா, மிஸ்டர் கூல் பெர்சனாலிலிட்டியா, சட்டத்தை மட்டும் கடுமை யாக பின்பற்றும் நபரா, சட்டத்தையும் மனிதாபி மானத்தையும் ஒரே அளவீட்டில் வைத்திருக்கிறாரா என்றெல்லாம் சோதித்து அறிகிறார்கள். இதன் மூலம் டெல்லிலியில் உள்ள பெரிய நிறுவ னங்கள் தரும் குறிப்புகளை மட்டும் ஆண்டுக் கணக்காக மனப்பாடம் செய்து படித்துவரும் மாணவர்கள் இனிமேல் வடிகட்டப்படுவார்கள் மருத்துவம் படித்திருந்தாலும் கலைப்பிரிவில் பட்டம் பெற்றிருந்தாலும் இனி மதிநுட்பம் எனும் ஒரே அளவுகோலிலில் தான் பரிசோதிக்கப் படுவார்கள். ஆரம்பக் காலத்தில் கலைப் படிப்பைப் படித்து வருபவர்களுக்கும், தாய்மொழியில் கல்வி பயின்றவர்களுக்கும் சிசேட் தேர்வு கொஞ்சம் சிரமம் என்பது உண்மைதான். அதற்குக் காரணம் பாடத்திட்டத்தில் உள்ள ஆங்கிலம் மற்றும் கணிதம்தான்! அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள் மாற்றப்பட்ட தேர்வு முறைக்குத்தகுந்தபடி தங்கள் பயிற்சி வகுப்பின் முறைகளையும் மாற்றிக் கொண்டு தற்போது இந்த பாடத் திட்டத்திற்கேற்ப பயிற்சி அளித்து வருகிறார்கள். இந்தத் தேர்வுமுறையால் கல்லூரி நாட்களி லிலிருந்தே இந்தியில் விருப்பப் பாடங்களை எடுத்து பல வருடங்களாக மனப்பாடம் செய்து படித்து வரும் வடமாநில மாணவர்களுக்கும் பாதிப்புதான். ஆனாலும் முதல்நிலைத் தேர்வுத்தாள் ஆங்கிலத்திலும், இந்தியிலும் இருப்பதால் இந்தி மாணவர்களுக்கு அது சாதகமாக இருக்கும்.

இந்த வருடம் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தினால் கிராமப்புற மாணவர்களுக்கு பின்னடைவு ஏற்படும் என்பது பற்றி நாம் தேர்வு நாள் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

அடுத்தடுத்த இதழில் ஐ.ஏ.எஸ். தேர்வின் ரகசியங்களையும் தயார் செய்யும் முறை பற்றியும் விரிவாக அலசுவோம்.

source;pothuarivuulagam

No comments:

Post a Comment