புதுடெல்லியை தலைமையிடமாகக் கொண்டு,இந்திய அளவில் பெண்களுக்குக்காக செயல்படும் (NCW)’நேஷனல் கமிஷன் ஆஃப் விமன்’ யாஸ்மின் அப்ராரை புதிய தலைவராக அறிவித்துள்ளது.
இவ்வமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்த கிரிஜா வியாஸ் அவர்களின் பொறுப்பிற்கான காலக்கெடு கடந்த ஏப்ரல் 8–ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதால், என்.சி.டபிள்யூ 1990 சட்டத்தின் கீழ், புதிய தலைமைக்கு யாரேனும் பொறுப்பாளரை தேர்ந்தெடுக்கும் வரை யாஸ்மின் அப்ரார் தற்காலிகமாக பணியாற்றுவார் என்று என்.சி.டபிள்யூ (NCW) அறிவித்துள்ளது.
இவர் 2005-ஆம் ஆண்டிலிருந்து என்.சி.டபிள்யூவின் ஒரு உறுப்பினராகவும், 2008-ஆம் ஆண்டில் இப்பொறுப்பிற்காக இரண்டாம் சுற்றுவரை முன்னேறிச் சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமில்லாமல் இவர் ராஜஸ்தானில் மிகவும் பெயர் பெற்ற சுதந்திரப் போராட்ட தியாகியின் மகள் மற்றும் அம்மாநிலத்தின் நிதி மற்றும் முன்னால் பாராளுமன்றத்தின் விவகாரத்துறை அமைச்சரானா மறைந்த அப்ரார் அஹமதின் மனைவியுமாவர். இவர் ‘ராஷ்ட்ரிய மஹிலா கோஷ்’ என்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக உள்ள அமைப்பின் ஆலோசகராவும் உள்ளார்.
thoothu
No comments:
Post a Comment