islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

"நாளுக்கு 7,000 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன'


உலகில் ஒவ்வொரு நாளும் ஏறத்தாழ 7,000 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என மருத்துவத் துறை ஏடான "லான்செட்' தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

2009-ம் ஆண்டுக்கான ஆய்வை ஆதாரமாகக் கொண்டு இந்த தகவலை லான்செட் மருத்துவ இதழ் வெயிட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி 2009-ம் ஆண்டில் 26 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தே பிறந்தன. இதில் ஏறத்தாழ 5,000 இறப்புகள் (70 சதவீதம்), இந்தியா, சீனா, வங்கதேசம் உள்ளிட்ட 10 நாடுகளில் நிகழ்ந்தன.

ஆயினும், இவ்வகையிலான இறப்புகள் குறைந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 1995-ம் ஆண்டு இறந்து பிறந்த சிசுக்களின் எண்ணிக்கை 30 லட்சமாகும். அதே வேளையில், 2009-ல் 26 லட்சமாக இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. பிரசவத்தின்போது முறையான மருத்துவ ஆலோசனைகளும் உதவிகளும் கிடைக்காதது இதற்குக் காரணம். அதே சமயம் மருத்துவ, உடல் ரீதியான காரணங்களும் உள்ளன என இந்த அறிக்கை கூறுகிறது.

கருத்தரித்துள்ள காலத்தில் தாய்க்கு வரக்கூடிய நோய்கள், ஏற்கெனவே உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்கள் தாய்க்கு இருப்பது, சிசு வளர்வதில் உள்ள உடல் ரீதியான தடைகள், கருத்தரிப்பு காலத்தில் சிசுவுக்கு ஏற்படும் குறைகள் இவற்றுடன் பிரசவ காலத்தில் ஏற்படும் சிக்கல்களும் குழந்தைகள் இறந்தே பிறப்பதற்கான முக்கிய மருத்துவக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஃபின்லாந்து நாட்டில் 1,000 பிரசவங்களுக்கு 2 இறப்புகளே சம்பவிக்கின்றன. அதே சமயம் இந்தியாவில் 1,000-க்கு 20 முதல் 66 சிசுக்கள் இறந்தே பிறக்கின்றன என லான்செட் அறிக்கை தெரிவிக்கிறது.
dinamani

No comments:

Post a Comment