islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இது புதுசு: எல்.பி.ஜி.பைக் வருமா?




ஒரு நாட்டின் எண்ணெய் வளத்திற்காக அந்நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், வல்லரசு நாடுகள் கட்டைப் பஞ்சாயத்து செய்வதற்குத் தயாராகிவிட்ட காலமிது! பெட்ரோலைவிட விலை மலிவானதும், சுற்றுச் சூழல் கேடு குறைவாக இருக்கும் எல்.பி.ஜி. கேஸ் மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் தற்போது பரவலான பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றது. எனினும் எண்ணிக்கையில் அதிகமிருக்கும் இரு சக்கர வாகனங்களில் எல்.பி.ஜி. கேûஸப் பயன்படுத்துவதற்கு இன்னமும் அரசு அனுமதி கிடைக்கவில்லை. இரு சக்கர வாகனங்களில் கேûஸப் பயன்படுத்துவதற்குப் பாதுகாப்பு விஷயத்தில் உத்தரவாதமில்லாததே முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகின்றது. இரு சக்கர வாகனங்களிலும் எல்.பி.ஜி. கேûஸப் பாதுகாப்புடன் பயன்படுத்தமுடியும் என்பதைத் தங்களின் நான்காமாண்டின் ஆய்வுக்காக செய்திருக்கின்றனர் சென்னையை அடுத்துள்ள தண்டலம் சவீதா பொறியியல் கல்லூரியில் படிக்கும் நல்லரசு, ரோஹித், திலீப் குமார், சுந்தர் ஆகிய மாணவர்கள். இந்த எல்.பி.ஜி. பைக் ஆய்வு குறித்து நல்லரசுவும் சுந்தரும் நம்மிடம் பேசியதிலிருந்து...

""எல்.பி.ஜி.கேûஸ இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்தாதற்குக் காரணமே கேஸ் சிலிண்டரிலிருந்து கசிந்து தீப்பிடித்து விடுமோ, வெடித்துச் சிதறிவிடுமோ என்ற அச்சம்தான். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில் எங்களின் ஆய்வைச் செய்வதென்று முடிவெடுத்தோம். இதற்கு முதல் கட்டமாக எல்.பி.ஜி. கேûஸ நிரப்பும் டேங்க்கை 5 லிட்டர் மட்டுமே பிடிக்கும் அளவுக்கு சிறியதாகவும் உறுதியானதாகவும் மாற்றியமைத்தோம். ஆனால் இதில் 80 சதவிகிதம் வரை எல்.பி.ஜி. கேûஸ நிரப்பிக் கொள்ளலாம். இதுவும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். இதற்கு மேல் இதில் நிரப்பமுடியாதவகையில் உருவாக்கியிருக்கிறோம்.

பல்முனைத் திறன் கொண்ட வால்வு ஒன்றைத் டேங்க்கோடு பொருத்தியிருக்கிறோம். இதில், திரவ எரிபொருளைப் பங்க்கிலிருந்து கேஸ் டேங்கிற்கு வருவதற்கான இன்லட் வால்வும், டேங்கிலிருந்து எரிபொருள், என்ஜினுக்குச் செல்வதற்கான அவுட்லட் வால்வும் இருக்கும். பல்முனை வால்விலிருக்கும் இன்னொரு முக்கியமான அமைப்பு "ஃபியூஷிபில் பிளக்'. எல்.பி.ஜி. வாயு சுற்றுப்புற வெப்ப அளவு 120 டிகிரி செல்சியஸ் இருக்கும்போது எரியும் தன்மை பெற்றுவிடும். இந்த வெப்ப அளவு ஏற்படும்போது இன்லட் வால்வு, அவுட்லட் வால்வு இரண்டும் மூடிக் கொண்டுவிடும். இதனால் திரவ எரிபொருள் டேங்க்கை விட்டு வெளியே வராது. எனவே பற்றியெரியவோ, வெடித்துவிடவோ வாய்ப்பில்லை. இதுதான் நாங்கள் அமைத்திருக்கும் பாதுகாப்பு முறை.

எல்.பி.ஜி. கேஸ் நிரப்புவதற்கான டேங்க்கை இரு சக்கர வாகனத்தின் பில்லியனுக்குப் பக்கத்தில் பொருத்திக் கொள்ளலாம். இதனை இயக்குவதற்கு எலக்ட்ரானிக் ஸ்விட்சையும் ஹாண்டில் பாரில் பொருத்திக் கொள்ளலாம். கேஸின் பயன்பாட்டை இந்த ஸ்விட்சின் மூலம் "ஆஃப்' செய்துவிட்டு, ஒருவர் பெட்ரோலைப் பயன்படுத்தியும் வண்டியை ஓட்டலாம். இரண்டையும் ஒரேசமயத்தில் பயன்படுத்தமுடியாது.

5 மி.மீ. அகலமுள்ள டேங்க், பல்முனை வால்வு, திரவ எரிபொருளை வாயுவாக மாற்றும் சாதனம், எல்.பி.ஜி. கேஸின் இயக்கத்தைத் தொடங்கவும் நிறுத்தவும் உதவும் எலக்ட்ரானிக் ஸ்விட்ச், செம்பு உலோகத்தாலான குழாய் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஒரு இருசக்கர வாகனத்திற்கு எல்.பி.ஜி. கேûஸக் கொண்டு இயக்கும் முறையை நாங்கள் ஆய்வு செய்வதற்கு ரூபாயிரம் எட்டாயிரம் வரை செலவானது. கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.வெங்கடசாமி, திட்ட ஒருங்கிணைபப்பாளர்களான நரேஷ் பாபு மற்றும் அகிலன் ஆகியோரின் ஆதரவால்தான் இதனை எங்களால் செய்ய முடிந்தது.

1 லிட்டர் பெட்ரோலைக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் அதிகபட்சம் 55 கி.மீ. வரை பயணிக்கலாம். 1 லிட்டர் எல்.பி.ஜி. கேûஸப் பயன்படுத்தி 65 கி.மீ. வரை பயணம் செய்யலாம். விலையும் பெட்ரோலுக்கு 62 ரூபாய் என்றால் எல்.பி.ஜி. கேஸýக்கு ரூபாய் 37 தான் ஆகிறது. இவ்வளவு பயன் உள்ள எல்.பி.ஜி. கேûஸ இரு சக்கர வாகனங்களில் பயன்படுத்துவதற்கு அரசு அனுமதி அளிக்கவேண்டும். பெரிய நிறுவனங்கள் எங்களின் ஆய்வு முடிவைக் கையிலெடுக்கும் போது இதன் விலை இன்னும் கூட குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது'' என்றனர் நல்லரசும் சுந்தரும்.
dinamanikathir

No comments:

Post a Comment