"எந்த பகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு விழுந்தது என்பதை கண்டறிய முடியாத வகையில், ஓட்டு எண்ணிக்கையில் புதிய முறையை பின்பற்றுவது பற்றி தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது,'' என்று, பிரவீன்குமார் தெரிவித்தார்.
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்காளர்கள் அனைவரும் மனசாட்சியுடன் ஓட்டுப் போட வேண்டும். பண பட்டுவாடா போன்ற எது நடந்திருந்தாலும், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டளித்தனர் என்பதை கண்டுபிடிக்க முடியாது. எனவே, பயமின்றி அவர்கள் ஓட்டு போடலாம். எந்த பகுதியில் யாருக்கு எவ்வளவு ஓட்டு என்பதை கண்டுபிடிக்க முடியாத வகையில், புதிய முறையில் ஓட்டு எண்ணிக்கையை நடத்துவது பற்றி தேர்தல் கமிஷன் ஆய்வு செய்து வருகிறது. எனவே, ஓட்டு போடவில்லை என்று வாக்காளர்களை யாரும் பழிவாங்க முடியாது. முன்பு, ஓட்டுச்சீட்டுகளை கலக்கி போட்டு, எண்ணியது போல, புதிய நடைமுறைகள் ஆராயப்பட்டு வருகின்றன. ஓட்டுச்சாவடிகளில் 9,500 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதன் மூலம் யாருக்கு ஓட்டுப் போடுகின்றனர் என்பதை கண்டறிய முடியாது. தேர்தல் முறைகேடுகள் எதுவும் நடந்தால், அந்த தொகுதியில் நடந்த தேர்தல் ரத்து செய்யப்படும். பண பட்டுவாடா உட்பட முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, தேர்தல் கமிஷன் உன்னிப்பாக கவனித்து வருகிறது. மாவட்ட கலெக்டர்கள், பார்வையாளர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், தேர்தலை ரத்து செய்வது பற்றி தேர்தல் கமிஷன் முடிவு செய்யும். அனைத்து ஓட்டுச்சாவடிகளிலுமே, துணை ராணுவப் படையினர் ரோந்து பணியில் ஈடுபடுவர்.
ராணுவத்தில் இருப்பவர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள், வீடியோ மற்றும் கம்ப்யூட்டர் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் ஆகியோருக்கு மட்டும் தபால் ஓட்டு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு இருந்தாலும், ஒருவர் கூட அதற்காக விண்ணப்பிக்கவில்லை. மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பணம் வழங்கப்படுவது குறித்து வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கணக்கில் அதுபோன்று பணம் ஏதும் டிபாசிட் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, மகளிர் சுய உதவிக்குழுவினர், கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்ததாக, இதுவரை 61 ஆயிரத்து 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 1,123 வழக்குகள், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பொருள் கொடுத்ததற்காக பதிவு செய்யப்பட்டவை. மொத்தம் 33.44 கோடி ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் நடவடிக்கையால் தான் பணம் கொடுப்பது தடுக்கப்பட்டுள்ளது. இந்தளவு நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால், நிலைமை மிகவும் மோசமாகி, வெளிப்படையாக விற்பனை செய்வது போல ஆகியிருக்கும். கடந்த மார்ச் 4ம் தேதி பார் கவுன்சிலுக்கு நடந்த தேர்தலின் போது, வக்கீல்களில் இடது கை ஆள்காட்டி விரலில் மை வைக்கப்பட்டுள்ளது. 40 நாட்கள் ஆகிவிட்டதால், அது அழிந்திருக்கும். அப்படி அழியாமல் இருந்தால், அவர்கள் தங்களது பார் கவுன்சில் அட்டையுடன் பூத் சிலிப்பை காண்பித்து ஓட்டு போடலாம். இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:
Post a Comment