“ஸ்டெம் செல்” மூலம் சிறுநீரகம் தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். “ஸ்டெம்செல்”கள் மூலம் உடல் உறுப்புகளில் ஏற்படும் நோய்கள் குணப்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தற்போது அவற்றின் மூலம் மனித சிறுநீரகத்தை விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர்.
ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஜாமி டேவிஸ் தலைமையில் நிபுணர்கள் இந்த ஆய்வை மேற் கொண்டனர்.
சிறுநீரகம் பாதிக்கப்பட்டு அது தேவைப்படுவோரின் ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்பட்டன. பின்னர் அவை சோதனை குழாய் முறையில் சிறுநீரகமாக ஆய்வு கூடத்தில் வளர்க்கப்பட்டது.
குழந்தையின் கருவில் இருக்கும் 1/2 சென்டி மீட்டர் அளவுக்கு வளர்ந்துள்ளது. அவற்றை மனித உடலில் பொருத்தி முழு வளர்ச்சி அடைந்த சிறுநீரகமாக்க முடியம் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். அது மருத்துவ உலகின் மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.
ஏனெனில் சிலருக்கு மற்றவர்களிடம் இருந்து தானமாக பெறப்படும் சிறுநீரகம் ஒத்துக் கொள்வதில்லை. மாறாக மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டவர் உயிரிழக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. ஆனால் இந்த முறையில் தயாரித்து பொருத்தப்படும் சிறுநீரகம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.
ஏனெனில் இந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டவரின் உடலில் இருந்து ஏற்கனவே சேகரித்து வைக்கப்பட்டிருந்த ஸ்டெம் செல்கள் மூலம் தயாரிக்கப்பட்டது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment