islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

குஜராத் இனப்படுகொலை வழக்கு சட்ட உதவியாளர் ஹரீஸ் சால்வேக்கு மோடி அரசுடன் வர்த்தக தொடர்பு



குஜராத் இனப்படுகொலை தொடர்பான வழக்குகளில் உச்சநீதிமன்றம் அமிக்கஸ் க்யூரியாக (சட்ட உதவியாளர்) நியமிக்கப்பட்டுள்ள பிரபல வழக்கறிஞர் ஹரீஷ் சால்வேக்கு குஜராத் அரசுடன் தொடர்புடைய வர்த்தக திட்டங்களில் பங்கிருப்பதாக டெஹல்கா பத்திரிகை கூறுகிறது.



லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இரோஸ் எனர்ஜி நிறுவனத்திற்கு குஜராத்தில் 50 மெகாவாட் மின் சக்தி திட்டத்திற்காக குஜராத் அரசிற்கும் இரோஸ் எனர்ஜி உரிமையாளர் கிஷோர் லுல்லாவுக்காகவும் சால்வே இடைத்தரகராக செயல்பட்டார் என்பதற்கான ஆதாரங்களை டெஹல்கா வெளியிட்டுள்ளது.

லுல்லாவின் நண்பரான சால்வேக்கும் இந்த வர்த்தகத்தில் பங்கிருப்பதாக டெஹல்கா சந்தேகிக்கிறது.

நரோடா பாட்டியா, குல்பர்க் சொசைட்டி உள்ளிட்ட குஜராத் இனப் படுகொலை வழக்குகளில் உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சட்ட உதவியாளர்தாம் சால்வே ஆவார்.

சால்வேயின் நிலைப்பாடுகளில் குஜராத் வழக்கை நடத்தும் சிட்டிசன் ஃபார் பீஸ் அண்ட் ஜஸ்டிஸ், குஜராத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆஜராகும் மூத்த வழக்கறிஞர் காமினி ஜெய்ஷ்வால் ஆகியோர் நிதிமன்றத்தில் இதுக்குறித்து சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

கேரளத்திற்காக முல்லைப் பெரியார் வழக்கை நடத்துவதும் சால்வே ஆவார். குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் சட்ட உதவியாளராக இருக்கும் பொழுதே, இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்குகளில் சால்வே குஜராத் அரசுக்கு ஆதரவாக ஆஜரானதாக இஷ்ரத்தின் தாயார் ஷமீமா கவுர் சி.பி.ஐ விசாரணைக்கோரி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருந்தார்.

சால்வே இடைத்தரகராக செயல்படும் மின்சக்தி திட்டத்திற்காக குஜராத் அரசு அதிகாரிகள் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். மேலும் குஜராத் அரசு 25 மெகாவாட் மின்சக்தி திட்டத்திற்கான நிலத்தை ஒதுக்கியுள்ளது.

குஜராத் குல்பர்க் சொசைட்டி கூட்டுபடுகொலை வழக்கில் ஸாக்கியா ஜாஃப்ரி சி.பி.ஐ விசாரணை தேவை என மனுத்தாக்கல் செய்த வேளையில், சட்ட உதவியாளர் என்ற நிலையில் அதற்கு தெரிவிக்க வேண்டிய சால்வே, சிறப்பு புலனாய்வு விசாரணை போது என தெரிவித்திருந்தார்.

குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு புலனாய்வுக் குழுவின் மீது சந்தேகங்களை எழுப்பியிருந்தனர்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான பல பிரச்சனைகளையும் கேட்பதற்கு சால்வே தயாராகவில்லை என தீஸ்டா செடல்வாட் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார். பல வழக்குகளிலும் எஸ்.ஐ.டி அலட்சியமாக விசாரணையை மேற்கொண்ட பொழுது விசாரணையை கண்காணிக்க வேண்டிய பொறுப்பை வகிக்கும் சால்வே ஒன்றுமே செய்யவில்லை என தீஸ்டா செடல்வாட் சுட்டிக்காட்டுகிறார்.
thoothu

No comments:

Post a Comment