islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமியர்களை அலட்சியப்படுத்தி இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட அ தி மு க தேர்தல் அறிக்கை!!!!



இலவசங்களை வழங்கியே வாக்காளர்களை பரவசப்படுத்தும் பாணியை போட்டிப்போட்டுக் கொண்டு இந்தியாவிலேயே தமிழகத்தின் திராவிடக் கட்சிகள்தாம் கடைப்பிடித்து வருகின்றன.



இலவசங்களை அள்ளி வழங்கி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட கலைஞருக்கு சற்றும் சளைக்காமல் அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரான செல்வி.ஜெயலலிதாவும் தனது பங்கிற்கு இலவசங்களால் அலங்கரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்துவிட்டு தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கையில் சிறுபான்மை சமூகத்திற்கான சலுகைகள் எதுவுமில்லை. முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உயர்த்துவேன் என ஜெ.வாக்குறுதியளித்ததாக அவருடன் கூட்டணி வைத்துள்ள சமுதாய கட்சியும், ஆதரவு தெரிவித்த முஸ்லிம் அமைப்பும் ஒன்றும் தெரிவித்திருந்தன. ஆனால், இதுப்பற்றிய எந்த வாக்குறுதியையும் தேர்தல் அறிக்கையில் ஜெ.தெரிவிக்கவில்லை. ஒருவேளை இடஒதுக்கீடு அவர் மனதில் உண்டு என்று சொன்னாரோ என்னவோ!!

தேர்தல் அறிக்கை அபாரம் ஆனால் தி மு க அறிக்கையில் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகப்படுத்தி தருவதாக அறிவித்திருப்பதாலும்,அ தி மு க இஸ்லாமியர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்தியிருப்பதாலும் உண்மையான முஸ்லிம்கள் சமுதாய நலன் கருதி தி மு க வை ஆதரித்து ஆட்சிக்கு வந்தவுடன் போராடியாவது இட ஒதுக்கீட்டை பெற்றுக்கொள்ளலாம்.எனவே மானமுள்ள முஸ்லிம்கள் தி மு க வை ஆதரிக்க வேண்டும்.

No comments:

Post a Comment