islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

ஹோலி பண்டிகையில் தொந்தரவு: மாணவிகளை காவலில் வைத்தது போலீஸ்




நேபாளத்தில் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்ததாக 104 பேரை போலீஸôர் தடுப்புக் காவலில் வைத்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் மாணவிகள்.



÷நேபாளத்தில் சனிக்கிழமை ஹோலி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையின் போது வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசியும், தண்ணீரை ஊற்றியும் கொண்டாடுவது வழக்கம்.

÷ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நேபாளத்தில் இந்த கொண்டாட்டம் பொதுமக்களுக்கு தொல்லை தருவதாக அமைந்துவிட்டது.

சிறார்களும், இளைஞர்களும் முன்பின் தெரியாதவர்கள் மீதும், சாலைகளில் நடந்து செல்பவர்கள் மீதும் வண்ணப்பொடிகளை பூசி தொந்தரவு அளித்து வந்தனர்.

÷இதனையடுத்து இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களை கட்டுப்படுத்துமாறு போலீஸôருக்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட இடங்களில் போலீஸôர் சனிக்கிழமை கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

÷அப்போது பொதுமக்களுக்கு தொந்தரவு அளித்த 104 பேரை போலீஸôர் பிடித்து தடுப்புக் காவலில் வைத்தனர். இவர்களில் சுமார் 47 பேர் பள்ளி மாணவ, மாணவியர். இவர்கள் எச்சரிக்கப்பட்டபின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மேலும் கல்லூரி மாணவிகள், மாணவர்களை போலீஸôர் நாள் முழுவதும் தடுப்புக் காவலில் வைத்தனர்.

÷போலீஸôரின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment