islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இந்தியா:ஹோலி கொண்டாட்டத்தில் பலர் மரணம்




ஹோலி கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஒன்பது பேர் மரணித்துள்ளனர்.




ஹோலி கொண்டாட்டத்திற்கு பிறகு உடலில் படிந்த வண்ணத்தை கழுகுவதற்காக யமுனா நதியில் இறங்கிய கிழக்கு டெல்லியில் மாந்தாலியைச் சார்ந்த அஜீத் குமார்(வயது 18), நானாக்ஸர் குருத்வாராவுக்கு அருகிலுள்ள குட்டையில் இறங்கிய விக்கி(வயது 15) ஆகியோர் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

அதேவேளையில் ஹைதராபாத்தில் மவ்லானா அலி பகுதியில் குட்டையில் நீந்தச் சென்ற 15 வயதிற்கும் 17 வயதிற்குமிடையேயான நான்கு மாணவிகள் மூழ்கி இறந்தனர். ஸாய், ஸ்ரீகாந்த், வினோத், அபினவ் ஆகியோர் இறந்தவர்களாவர்.

டெல்லியில் கொண்டாட்டங்கள் முடிந்து வரும் வழியில் சரக்கு வண்டியும், ஸ்கூட்டரும் மோதியதில் வினோத் ராய்(வயது 27), அவரது மனைவி தீபாராய்(வயது 23) ஆகியோர் மரணமடைந்தனர்.

மத்திய டெல்லியில் ரஞ்சித் நகரில் நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் சஞ்சீவ் என்ற இளைஞர்(வயது 18) கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டார். ஹோலி கொண்டாட்ட வேளையில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திய போதையில் ஏற்பட்ட மோதலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹோலி கொண்டாட்டத்தின் போது டெல்லியில் மாலை ஐந்து மணிநேரத்திற்குள் போக்குவரத்து சட்டங்களை மீறிய 5858 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவுச்செய்துள்ளது. 675 பேர் மீது மது அருந்திவிட்டு அபாயகரமாக வாகனத்தை ஓட்டியதற்காக வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 5300 பேர் மீது வழக்கு பதிவுச்செய்யப்பட்டது. 15 பேர் மரணமடைந்திருந்தனர்.

கடந்த 11 வருடங்களிடையே டெல்லியில் மட்டும் ஹோலி கொண்டாட்ட வேளையில் 160 பேர் வாகன விபத்துக்களில் இறந்துபோனதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment