islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

இஸ்லாமிய படைகள் ஒன்றிணைய வேண்டும்: கர்னல் கடாஃபி



அமெரிக்கா உள்ளிட்ட நேச நாட்டுப் படைகளுக்கு எதிராகவும், லிபியாவிற்கு ஆதரவாகவும் அனைத்து இஸ்லாமிய படைகள் ஒன்றுசேர வேண்டும் என்று சொந்த நாட்டு மக்களிடையே கடும் எதிர்ப்பிற்குள்ளாகியிருக்கும் லிபிய அதிபர் கர்னல் கடாஃபி கூறியுள்ளார்.

லிபயா தலைநகர் டிரிபோலி, மிஸ்ருட்டா, பென்காசி ஆகிய இடங்களை குறிவைத்து நேச நாட்டுப் படைகளின் விமானங்களும், ஏவுகணைகளும் பெரும் தாக்குதல் நடத்திவரும் நிலையில், டிரிபோலி நகரின் ஒரு பகுதியான பாப் அல் அஜிஜியா என்ற இடத்தில் கூடிய தனது ஆதரவாளர்களிடம் கடாஃபி பேசியுள்ளார். அது நேரடியாக அந்நாட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது.

“இஸ்லாமை அழிக்க நினைக்கும் நாடுகள் போர் தொடுத்துள்ளன. இந்தப் போரை எதிர்த்து அனைத்து இஸ்லாமிய படைகளும் ஒன்றிணைய வேண்டும். சுதந்திரமான அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும். இறுதியில் நாம்தான் வெற்றி பெறுவோம்” என்று கடாஃபி பேசியுள்ளார்.

நேச நாட்டுப் படைகளின் குண்டு வீச்சைக் கண்டு தான் பயப்படவில்லை என்று்ம கடாஃபி கூறியுள்ளார். “நாம் பயப்படவும் மாட்டோம், சரணடையவும் மாட்டோம். நம் மீது செலுத்தப்படும் ஏவுகணைகளை நாம் பரிகசிக்கின்றோம். இவைகள் நீண்ட காலத்திறகு நீடிக்கப்போவதில்லை” என்று கூறியுள்ளார்.

தான் பாதுகாப்பாக உள்ளதாக கூறியுள்ள கடாஃபி, விமானத் தாக்குதலிற்கு எதிரான மிகப் பாதுகாப்பான ஆயுதம் மக்களே என்றும் கடாஃபி கூறியுள்ளார்.

“நான் எதற்காகவும் பயப்படவில்லை. பேரழிவை ஏற்படுத்தும் விமானங்களைக் கண்டோ அல்லது புயலைக் கண்டோ பயப்படவில்லை. எதிர்த்துப் போராடுவேன், எனது வீடு இங்குதான் ஒரு கூடாரத்தில் உள்ளது, நான்தான் அதற்கு உரிமையாளன். நாளையை நான் உருவாக்குபவன். நான் இங்குதான் இருக்கிறேன், இங்குதான் இருக்கிறேன்” என்று பேசுயுள்ளார் கடாஃபி.

No comments:

Post a Comment