islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

யேமன் ரத்தக்களரியில் 52 பேர் பலி



யேமன் நாட்டு மன்னர் அலி அப்துல்லா சாலேவுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்த மக்கள் மீது தலைநகர் சானாவில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலில் இதுவரை 52 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.




யேமன் நாட்டை அலி அப்துல்லா சாலி கடந்த 32 ஆண்டுகளாக ஆண்டு வருகிறார். அவருடைய ஆட்சியில் மக்களுடைய வாழ்க்கைத் தரம் நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகக் குற்றஞ்சாட்டும் அரசு எதிர்ப்பாளர்களும், சம உரிமை கோரும் ஷியா பிரிவினரும், தனி நாடு கோரும் பிரிவினைவாதிகளும் அவருடைய தலைமைக்கு எதிராகக் கிளர்ச்சி செய்துவருகின்றனர்.

இதுவரை இந்தக் கிளர்ச்சியை அரசு சாதாரணமாகத்தான் அணுகியது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய அரசுகளுக்கு ஆதரவாளராகத் திகழும் மன்னரின் விசுவாசிகள் சிலர் இந்தக் கிளர்ச்சியை இப்படியே வளரவிடக்கூடாது என்று முடிவு செய்து சற்று பலமாக அடக்க முற்பட்டதன் விளைவே இந்தப் படுகொலைகள் என்று கூறப்படுகிறது.

தலைநகர் சானாவில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு திடலில் கூடிய மக்களை பெரிய பெரிய கட்டடங்களின் கூரைகளில் ஏறி நின்ற மன்னரின் ஆதரவாளர்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் சரமாரியாகச் சுட்டனர். இதனால் ஏராளமானோர் தலையில் குண்டடி பட்டு இறந்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

ஏடனிலும்: நாட்டின் தெற்கில் உள்ள ஏடன் நகரிலும் அரசு எதிர்ப்பாளர்கள் மீது அடக்குமுறை நடவடிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.

நாட்டில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் உயிருக்கு அஞ்சி வீட்டில் முடங்கிக்கிடக்காமல் அரசுக்கு எதிராக கோஷமிட்டுக்கொண்டே நகர சதுக்கத்தில் திரண்டனர்.

மக்கள் மீது அடக்குமுறையைப் பயன்படுத்தியது போலீஸôர் அல்ல என்றும் முகமூடி அணிந்த விஷமிகள் என்றும் மன்னர் கூறினார். ஆனால் மக்கள் அதை ஏற்றதாகத் தெரியவில்லை.

மக்களை அடக்க வேண்டாம், அவர்களுடைய அடிப்படை உரிமைகளை மதித்து நடங்கள் என்று மனித உரிமைகளுக்கான சர்வதேச அமைப்புகளும் அமெரிக்க அரசும் வேண்டுகோள்கள் விடுத்துள்ளன. எனவே இந்த விவகாரத்தில் மன்னர் தலையிட்டு உடனே ராணுவ நடவடிக்கையை நிறுத்தி வைப்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.
dinamani

No comments:

Post a Comment