லிபியா அதிபர் கடாஃபியின் மகன் காமிஸ் கடாஃபி மரணமடைந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரிபோலியில் உள்ள பாப் அல்-அஸிஸியா கட்டடத்தில், கடாஃபியின் மகனும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த சில உறவினர்களும் தங்கியிருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம், லிபியா விமானப்படை பைலட் ஒருவர் ஜெட் விமானம் ஒன்றை அந்த கட்டடத்தின் மீது திட்டமிட்டு மோதச் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில், காமிஸ் கடாஃபி படுகாயமடைந்த நிலையில் திரிபோலியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக அரபு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.
கடாஃபி ஆதரவு படையினர் மீது அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் தாக்குதல் நடத்திவரும் நிலையில், லிபியா விமானப்படை பைலட் நடத்திய தாக்குதல் காரணமாக கடாஃபி மகன் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment