சென்னை, : பொதுமக்களின் பயன்பாட்டுக்காக இலவச டாயலிசிஸ் மையம் சென்னை மாநகராட்சியின் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் பிப்.28 திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
வள்ளுவர்கோட்டம் அருகில் உள்ள மாநகராட்சி ரத்த பரிசோதனை நிலையத்தில் இந்த மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மையத்தை தொடங்கி வைத்து மேயர் மா.சுப்பிரமணியன் பேசியது: தனியார் மருத்துவமனைகளில் ஒரு முறை டயாலிசிஸ் செய்வதற்கு ரூ. 3 ஆயிரம் வரை செலவாகும். இதனைக் கருத்தில் கொண்டு வடசென்னையில் பெரம்பூரிலும், தென்சென்னை வள்ளுவர் கோட்டத்திலும் டயாலிசிஸ் மையங்கள் ரூ. 50 லட்சம் செலவில் தொடங்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், துணை ஆணையர் (சுகாதாரம்) ஆசிஷ்குமார், துணைமேயர் ஆர். சத்தியபாமா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
dinamani

No comments:
Post a Comment