islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

மசூதி வாசலில் போதை பொருட்கள் விற்பனை:ரவுடி கும்பல் அட்டகாசம்!






மசூதி வாசல் முன்பு ரவுடி கும்பல் போதை பொருட்கள் விற்பனை செய்வதால் பொது மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் கலகம் மூளும் அபாயமும் அதிகரித்துள்ளது.



குமரிமாவட்டம் நாகர்கோவிலுள்ள இடலாக்குடி பகுதி முஸ்லிம் இன மக்கள் பெருபான்மையாக வாழும் பகுதியாகும். இப்பகுதியில் 10க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் உள்ளன. இவற்றில் பிரதானமான பள்ளி வாசல் பாவாகாசிம் பள்ளி வாசல் ஆகும். இது சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பள்ளிவாசல் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய பல்வேறு சிறப்புமிக்க பள்ளிவாசலின் முன் பகுதி தற்போது போதை மருந்துகள் வியாபாரத்திற்கும் இளைஞர்கள் மது அருந்தி கூத்தடிக்கும் பகுதியாகவும் மாறி உள்ளது குறித்து இடலாக்குடி வாழ் பொதுமக்கள் பெரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இரவு நேரத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது 15க்கும் மேற்பட்ட போதை பொருள் விற்கும் கும்பல் அப்பகுதிக்கு வருகிறது. இவர்களுக்கு உள்ளூர் ஏஜண்டுகள் சிலர் உதவி செய்கின்றனர். இந்தக் கும்பல் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு கஞ்சா, பிரவுண்சுகர் போன்ற போதைப் பொருட்களை விற்பனை செய்கிறார்கள். படிக்கும் இளைஞர்களை எளிதில் இந்தக் கும்பல் தனது வலைக்குள் சிக்க வைத்து விடுகிறார்கள். வெளிநாட்டில் தந்தை வேலை பார்ப்பதால் கையில் அதிக பணம் புழங்கும் இப்பகுதி இளைஞர்கள் தங்களது எதிர்காலத்தை அதல பாதாளத்திற்குத் தள்ளும் இத்தகைய போதைப்பொருள் கும்பலின் கைகளில் எளிதாக சிக்கி விடுகிறார்கள்.

சமூகத்தைச் சீரழிக்கும் இப்பாதக‌ செயல் குறித்து வெளிப்படையாக பேசுவதற்குக்கூட அச்சப்படும் அளவுக்கு ரவுடி கும்பலின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இவர்கள்மீது காவல்துறை கடும்நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

source;inneram

No comments:

Post a Comment