islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்துகொண்ட மீலாது விழா நிகழ்ச்சி..






குவைத்தில் மஜ்லிஸ் இஹ்யாவு சுன்னாஹ் குவைத் (மிஸ்க்)அமைப்பின் சார்பில் மீலாது நபி பெருவிழா மற்றும் நூல் வெளியீட்டு விழா பிப்ரவரி 18ம் தேதியன்று மறுசீரமைப்பு சமூக அரங்கில் நடைபெற்றது.




மிஸ்க் அமைப்பின் தலைவர் மௌலவி டி.பி.அப்துல் லத்தீப் காசிமி தலைமை வகித்தார். பொருளாளர் கபீர் அலி இறை வசனங்களை ஓதினார். இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு சங்க தலைவர் சித்திக் வலியக்கத் கருத்தரங்கை துவங்கி வைத்து துவக்கவுரை நிகழ்த்தினார். இணைச் செயலாளர் முஹம்மது அலி ரஷாதி வரவேற்புரை நிகழ்த்தினார். மிஸ்க் நிறுவனத் தலைவர் மௌலவி டி.பி.அப்துல் லத்தீஃப் காஸிமியால் எழுதப்பட்ட நபிகள் நாயகத்தின் (ஸல்) வாழ்க்கை வரலாற்று நூலை மௌலவி முஹம்மது முஸ்தபா ரஷாதி வெளியிட டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) பெற்றுக் கொண்டார்.அதனைத் தொடர்ந்து சித்திக் வலியக்கத், புரவலர்கள், உலமாக்கள் பெற்றுக் கொண்டனர். தொண்டி அல் அஸ்ஹரிய்யா அரபிக்கல்லூரி தலைவர் மௌலவி முஹம்மது முஸ்தபா ரஷாதி, டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) ஆகியோர் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினர். தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரக் கழகத்தின் தலைவர் அப்துல் அலீம் வாழ்த்துரை வழங்கினார். முனீர் அஹமது நிகழ்வினை தொகுத்து வழங்கினார்.
இவரை அழைத்து தவ்ஹீதை பேசசொல்லும் இயக்கங்கள் இனியாவது திருந்துமா?

No comments:

Post a Comment