islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. முகுல் சின்கா






கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

2002-ம் ஆண்டு நிகழ்ந்த இந்த ரயில் எரிப்பு சம்பவத்தில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகளின் தீர்ப்பு விவரத்தை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.



தீர்ப்பை அளித்த நீதிபதி பி.ஆர். படேல், இந்த வழக்கு மிகவும் அரிதிலும் அரிதான வழக்கு என்று குறிப்பிட்டார். சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-6 பெட்டிக்கு தீ வைத்துக் கொளுத்தியதில் தொடர்புடையவர்கள் என 31 பேரை அறிவித்தது. இதில் முக்கிய பங்காற்றிய 11 பேருக்கு தூக்கு தண்டனையும் மற்ற 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார் என்று அரசு வழக்கறிர் ஜே.எம். பாஞ்சால் குறிப்பிட்டார்.

குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வக்கீல் முகுல் சின்கா இந்த தீர்ப்பு அதிர்ச்சி அளிப்பதாக கூறினார். அவர் மேலும் கூறுகையில், கோத்ரா ரெயில் எரிப்பில் சதி குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதற்கு ஆதாரமும் இல்லை. இந்த நிலையில் 11 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து இருப்பது கடும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த தண்டனை அளவுக்கு அதிமானது, நியாயமற்றது என்றார்.

ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு பிரிவுகளின்கீழ் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை அனைத்தையும் அவர்கள் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

குற்றவாளிகள் 31 பேருக்கும் தூக்கு தண்டனை அளிக்கப்பட வேண்டும் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது. மிகவும் கோழைத்தனமான, கொடூரமான செயல் இது என்றும் இத்தகைய செயலை இனி எவரும் செய்ய நினைக்கவே கூடாது என்பதற்காக அதிகபட்ச தூக்கு தண்டனையை அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கடந்த பிப்ரவரி 22-ம் தேதி இந்த வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 302 (கொலை), 307 (கொலை முயற்சி), 120பி (குற்ற சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குத் தொடரப்பட்டது. இது தவிர, பிரிவு 147, 148 (மரணம் ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களுடன் தாக்க முயற்சி), 323, 324, 325,326 (காயம் விளைவித்தல்), 153 ஏ (இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் வகையில் மத விரோத செயலில் ஈடுபடுதல்), ரயில்வே சட்டப் பிரிவு (பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல்), மும்பை போலீஸ் சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விவரம்: பிலால் இஸ்மாயில் அப்துல் மஜித் சுஜெலா என்கிற பிலால் ஹாஜி, அப்துல் ரஸôக் முகமது குர்குர், ராம்ஜனி பினாமின் பெஹ்ரா, ஹஸன் அகமது சர்காலிஸ் லாலு, ஜபிர் பினியாமின் பெஹ்ரா, மெஹபூப் காலித் சந்தா, சலிம் என்கிற சல்மான் யூசுப் சத்தார் ஜர்தா, சிராஜ் முகமது அப்துல் மெடா என்கிற பாலா, இர்பான் அப்துல் மஜீத் காஞ்சி கலந்தர் என்கிற இர்பான் பூபூ, இர்பான் முகமது ஹனீபா அப்துல் கனி படாலியா, மெஹபூப் அமகது யூசுப் ஹசன் அலி என்கிற லதிகோ.

தீர்ப்பின் முழு விவர அறிக்கையும் அளிக்கப்படவில்லை. இதனால் இவர்களுக்கு என்ன காரணத்திற்காக மரண தண்டனை அளிக்கப்பட்டது என்ற விவரம் தெரியவரும். மேலும் எதற்காக 20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது என்ற விவரமும் புரியும் என்று அரசு வழக்கறிஞர் பாஞ்சால் கூறினார். நாட்டிலேயே 11 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட முதலாவது வழக்கு இதுவாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

20 பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படுமா? என்று கேட்டதற்கு, இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழுதான் அதை முடிவு செய்ய வேண்டும் என்றார்.

தண்டனை பெற்றவர்கள் 90 நாள்களுக்குள் மேல் முறையீடு செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. சிறையில் தண்டனை அனுபவித்துவரும் 20 பேரின் தண்டனைக் காலத்தில் அவர்கள் சிறையில் இருந்த காலம் கழித்துக் கொள்ளப்படும்.

மேல் முறையீடு: தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக குற்றவாளிகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஐ.எம். முன்ஷி குறிப்பிட்டார். தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகு மேல் முறையீடு செய்யப் போவதாக அவர் கூறினார். உயர் நீதிமன்றம் தீர்ப்பை இறுதிசெய்யும் வரை தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் எஸ்-6 ரயில் பெட்டி முற்றிலும் தீக்கிரையானது. இதில் பயணம் செய்த 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் ஹிந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மோதல் வெடித்தது. இதில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்களாவர்.

ரயில் பெட்டிக்கு தீ வைப்பதற்காக எளிதில் தீப்பற்றக்கூடிய பெட்ரோல் போன்ற எரிபொருள் வெளியிலிருந்து ஊற்றப்பட்டது என்ற வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. இருப்பினும் எஸ்-6 மற்றும் எஸ்-7 பெட்டிகளுக்கு இடையே உள்ள வழியிலிருந்து பெட்ரோல் ஊற்றப்பட்டிருக்கலாம் என்பதை நீதிமன்றம் ஏற்றது.

ரயில் எரிப்பு வழக்கில் சதி வேலை இருக்கலாம் என்பது சம்பவம் நிகழ்ந்த 4 மாதங்களுக்குப் பிறகே தெரியவந்தது. அயோத்தியிலிருந்து சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் திரும்பிக் கொண்டிருந்த கரசேவகர்களை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இந்த சம்பவம் நிகழ்த்தப்பட்டதாகக் கூறியதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை சபர்மதி மத்திய சிறையில்

2009-ம் ஆண்டு தொடங்கியது. இதில் 94 பேர் குற்றவாளிகளாக விசாரிக்கப்பட்டனர். மொத்தம் 253 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். ஓராண்டுக்கும் மேலாக நடந்த விசாரணையில் மொத்தம் 1,500 ஆவணங்கள் சாட்சியங்களாக குஜராத் போலீஸôர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 134 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்களில் போதுமான சாட்சியம் இல்லாததால் 14 பேர் விடுவிக்கப்பட்டனர். 5 பேர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்க்கப்பட்டனர். விசாரணையின் போதே 5 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேர் இன்னமும் தலைமறைவாக உள்ளனர். எஞ்சிய 94 பேரில் 63 பேரை குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவித்தது. இதில் பிரதான குற்றவாளியான மெüலானா உமர்ஜி, முகமது ஹுசேன் கலோடாவும் அடங்குவர்.

இந்த வழக்கு குறித்து விசாரிக்க இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டன. இதில் குஜராத் மாநிலம் அமைத்த நானாவதி கமிஷன், ரயில் எரிப்பு சம்பவம் விபத்து அல்ல என்றும் அது திட்டமிட்ட சதி என்றும் குறிப்பிட்டது. எஸ்-6 பெட்டி எரிக்கப்பட்ட சம்பவம் முன்கூட்டியே திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று தெரிவித்தது.

அயோத்தியிலிருந்து திரும்பும் கர சேவகர்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. நானாவதி கமிஷன் அறிக்கை 2008-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டது. அதேசமயம் லாலு பிரசாத் யாதவ் நியமித்த யு.சி.பானர்ஜி தலைமையிலான ஒருநபர் விசாரணைக் குழு ரயில் எரிப்பு சம்பவம் முழுக்க முழுக்க விபத்து என்று குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment