islam

அஸ்ஸலாமு அலைக்கும்...

பெண்கள் மிருகங்களை விட கேவலமானவர்களாமே ? ??


இந்து மதம் பெண்களை மிருகங்களை விடக் கேவலமாக கருதுவதை சான்றுகளோடு அதற்கான காரணத்தை பார்ப்போம்..

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?






இந்து மதமும் பெண்களும் (பாகம் 1)

சில மாதங்களிற்கு முன்பு திருமண மந்திரங்கள் பற்றிய ஒரு பதிவை சில தளங்களில் எழுதினேன். இதையடுத்து நான் எழுதியது சரியா என்று ஒரு விவாதம் ஏற்பட்டது.
இந்தத் தொடருக்கு காரணமான திருமணங்களில் சொல்லப்படும் மந்திரங்கள் பற்றி முதலில் ஒரு முறை பார்ப்போம்.

தமிழர்களைப் போன்று ஒரு இளிச்சவாயர்களை நான் எங்கும் காணவில்லை. தனக்குத் தெரியாத ஒரு மொழியில் எந்த ஒரு விடயத்தையும் யாரும் செய்ய மாட்டார்கள். அப்படிச் செய்வது என்றாலும், சொல்லப்படுவதன் அர்த்தத்தை புரிந்து கொண்டுதான் செய்வார்கள்.

ஆனால் நாமோ பிறப்பில் இருந்து இறப்பு வரை மதத்தின் பெயரில் எமக்கு தெரியாத ஒரு மொழியிலேயே அனைத்து சடங்குகளையும் செய்து வருகிறோம்.

உண்மையில் இந்தச் சடங்குகளும், அதில் சொல்லப்படும் மந்திரங்களும் எம்மை இழிவுபடுத்துவதை நாம் உணர்ந்து கொள்வதும் இல்லை. உணர்ந்து கொள்ள விரும்புவதும் இல்லை.

திருமணத்தின் போது சொல்லப்படும் சில மந்திரங்களை பார்ப்போம்.
‘சோமஹ ப்ரதமோ விவிதே கந்தர்வோ
விவித உத்ரஹ த்ரியோ அக்னிஸ்டே பதி
துரியஸ்தே மனுஷ்ய ஜாஹ’

இந்த மந்திரம் மணமகளை நோக்கி சொல்லப்படுகிறது.
நீ முதலில் சொமனுக்கு (சந்திரன்) உரியவளாக இருந்தாய், பின்பு கந்தர்வன் உன்னை அடைந்தான், பின்பு அக்கினி உன்னை அடைந்தான். இப்பொழுது நான்காவதாக ஒரு மானிடனை அடைகிறாய். இதுதான் இந்த மந்திரத்தின் அர்த்தம்.

அதவாது மணமகள் ஏற்கனவே மூன்று பேருக்கு மனைவியாக இருந்தவளாம். இப்பொழுது நான்காவதாக ஒருவனுக்கு மனைவியாகப் போகிறார்களாம். அத்துடமன் அவள் எந்தக் காலத்தில் யாருக்கு மனைவியாக இருந்தால் என்று ஆபாசமான விளக்கங்கள் (ரோமம் வளரும் போது கந்தர்வனுக்கு….) வேறு இருக்கிறது.

இதை பல பார்ப்பனர்களே இன்று ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் மக்களை ஏமாற்றி தலையில் மிளகாய் அரைப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டுள்ள சிலர் வேறு அர்த்தம் சொல்வார்கள்.

அதாவது மந்திரத்தில் உள்ள “பதி” என்ற சொல் கணவன் என்ற அர்த்தத்தில் சொல்லப்படுவது இல்லை. பாதுகாவலன் என்ற அர்தத்தில்தான் சொல்லப்படுகிறது. “முதலில் சந்திரன் அவளை பாதுகாத்தான், பின்பு கந்தர்வன் பாதுகாத்தான், பின்பு அக்னி பாதுகாத்தான்” என்று ஒரு விளக்கத்தை இவர்கள் சொல்வார்கள். பெண்ணின் உடலில் ஏற்படும் வளர்ச்சிக்கு அமைய இந்த மந்திரங்கள் அமைக்கப்பட்டது என்று “அறிவியல்” விளக்கம் வேறு தருவார்கள்.

சிலர் இன்னும் ஒரு படி மேலே போய் சோமன், கந்தர்வன், அக்னி ஆகியோர் அந்தப் பெண்ணிற்கு தந்தையாக இருந்தார்கள் என்று சொல்வார்கள்.

ஆனால் வேதங்களிலும் புராணங்களிலும் ஒரு பெண்ணிற்கு “பதி” என்பது அவள் கணவன் என்றுதான் சொல்லப்படுகிறது. அத்துடன் அதே வேதங்களிலும் புராணங்களிலும் “பொம்பிளைப் பொறுக்கிகளாக” சொல்லப்படுகின்ற சோமன், கந்தர்வன், அக்னி போன்றவர்களின் “பாதுகாப்பில்” தன்னுடைய மனைவி இருந்தாள் என்பது குறித்து எந்தக் கணவன் மகிழ்ச்சி அடைவான் என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

திருமண மந்திரங்கள் இவற்றுடன் முடிந்து விடவில்லை. தொடர்ந்து வருகின்ற திருமண மந்திரங்கள் இவர்கள் சொல்கின்ற இந்த மோசடி விளக்கத்தை சுக்கு நூறாக உடைக்கின்றன.

உதீர்ஷ்வாதோ விஷ்வாவஸேர் நம ஸேடா மஹேத்வா
அந்யா ப்ரபர்வ்யகும் ஸஞ்ஜாயாம் பத்யா ஸ்குஜ
உதீர்ஷ்வாத பதிவதீ ஹ்யேஷா விஷ்வாவஸீந் நமஸ கீர்ப்பீரிடடே அந்யா மிச்ச பித்ரு பதம வ்யக் தாகும் ஸதே பாகோ ஜனுஷா தஸ்ய வித்தி

இந்த மந்திரங்களின் பொருள் என்னவென்று தெரியுமா?
விஷ்வாவஸ் என்னும் கந்தர்வனே! இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். நீ வேறு கன்னிகையை விரும்புவாயாக! என் மனைவியை அவளுடைய கணவனுடன் சேர்த்து வைப்பாயாக!

இந்தப் படுக்கையில் இருந்து எழுந்திருப்பாயாக! இந்தப் பெண்ணுக்கு கணவன் இருக்கிறான் அல்லவா! விஷ்வாவஸாகிய உன்னை வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம். தகப்பின் வீட்டில் இருப்பவளும், இதுவரை திருமணம் ஆகாத கன்னிகையை நீ விரும்பவாயாக! உன்னுடைய அந்தப் பங்கு பிறவியினால் ஆகிவிட்டது என்று அறிவாயாக!

இப்பொழுது சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்! மணமகளிற்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து பாதுகாவலனாக விளங்கிய கந்தர்வனுக்கு அந்தப் பெண்ணின் படுக்கையில் என்ன வேலை?

நான் சொன்னதை மீண்டும் சொல்கிறேன். சோமன், அக்னி, கந்தர்வன் போன்றவர்களை மணமகளின் கணவர்கள் என்றுதான் மந்திரம் சொல்கிறது. இவற்றை விட மணமகளை முப்பது முக்கோடி தேவர்களுக்கும் மனைவியாக்கி, பின்பு புரோகிதம் சொல்லும் பார்ப்பானுக்கு மனைவியாக்கி, இவற்றிற்கு எல்லாம் கணவனின் சம்மதம் பெற்று… இப்படி இந்த மந்திரங்கள் நீண்டு செல்கின்றன.

இவைகள் இருக்கட்டும். வேறு சில திருமண மந்திரங்களை பார்ப்போம்.
தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வ
யஸ்ஸாம் பீஜம் மனுஸ்யா பவந்த்தீ
யான ஊரு உஷதி விஸ்ரயாதை
யஸ்யா முஷந்தஹா ப்ரஷரே பஷேபம்

இதனுடைய அர்த்தம்: நான் அவளோடு உறவு கொள்ளும் பொழுது எமது பாகங்கள் பொருந்துவதற்கு தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்.

இன்னும் ஒரு மந்திரம்:
விஸ்ணுர் யோனி கர்ப்பயது
தொஷ்டா ரூபானி பீமிசது
ஆரிஞ்சது ப்ரஜாபதி
தாதா கர்ப்பந்தாது

இதனுடைய அர்த்தம், பெண்ணினுடைய அந்தரங்க பகுதி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. மூன்று பாகங்களிலும் மூன்று தெய்வங்கள் இருந்து காவல் காக்கிறார்கள். (தெய்வங்களுக்கு வேறு வேலையே இல்லையா? )உறவின் பொழுது எல்லாம் சரியாக நடக்கிறதா என்று கண்காணிக்கின்ற வேலையையும் இவர்கள் செய்கிறார்கள்.

ஒன்றிற்கு மூன்று தெய்வங்கள் பெண்ணின் அந்தரங்க உறுப்பில் இருந்து கொண்டு எல்லாம் சரியாக பொருந்துகிறதா என்று காவல் காக்கிறார்கள் என்றால், ஒரு பெண் வல்லுறவிற்கு உட்படுத்தம்படும் போது, அதை தடுத்தால் மிகப் பெரிய உபகாரமாக இருக்குமல்லவா? அதற்கும் ஏதாவது மந்திரங்கள் சொன்னால் நன்றாக இருக்குமே!

இப்படியான மந்திரங்களை சொல்லி நடக்கின்ற திருமணங்களையே எமது தமிழர்கள் செய்கிறார்கள். இவைகளை விட்டு திருக்குறள் சொல்லி திருமணங்கள் செய்யுங்கள் என்றால், “கடவுள், மதம்” என்று அடம் பிடிக்கிறார்கள்.

தமிழினத்தை எப்படி திருத்த முடியும்?
திருமண மந்திரங்கள் ஒரு மணமகள் எவ்வளவு தூரம் இழிவுபடுத்தப்படுகிறாள் என்பதை பார்த்தோம். எம்மை ஈன்றெடுத்த தாயையே இந்த மந்திரங்கள் மிக மோசமாக கொச்சைப்படுத்துகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

No comments:

Post a Comment