இதய ஆபரேஷனுக்கான ஆஞ்சியோகிராம் சோதனையை தொடை இடுக்கு வழியாக செய்யப்படுவது வழக்கம். முதல்முறையாக கையின் மணிக்கட்டு வழியாக இதய ஆபரேஷனுக்கான ஆஞ்சியோகிராம் செய்து இங்கிலாந்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.நரம்பு மற்றும் தமனிகள் வழியாக குழாய் வடிவில் கேமரா செலுத்தி திரையில் கண்காணிப்பதை ஆஞ்சியோகிராம் என்கின்றனர். டாக்டர் ராட் ஸ்டேபிள்ஸ் கூறுகையில், ‘‘ஆஞ்சியோபிளாஸ்டி முறையில் எதிர்கால இதய சிகிச்சையாக இந்த கண்டுபிடிப்பு இருக்கும். இதனால், தொடை இடுக்கு (க்ரோயின்) வழியாக செய்வதில் ஏற்படக்கூடிய பின் விளைவுகள் தவிர்க்கப்படும்’’ என்றார்.
No comments:
Post a Comment